நீர்வேலி பொன் சக்தி கலாகேந்திரா நாட்டியப்பள்ளி மாணவி அபிநயா கஜேந்திரன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம்

நீர்வேலி பொன் சக்தி கலாகேந்திரா நாட்டியப்பள்ளி மாணவி அபிநயா கஜேந்திரன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்வு இன்று 12.03.2022 மாலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. செந்தமிழ்சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கன் கலந்துகொண்டார். கௌரவ விருந்தினர்களாக யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. யமுனானந்தாவும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி பிரதி அதிபர் திருமதி து.நேசகுமாரும் கலந்து கொண்டனர்யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் மதிப்பீட்டுரை ஆற்றினார். திருகோணமலை கிண்ணியா தென்கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் ஆசியுரை வழங்கினார்நிகழ்வில் அணிசேர் கலைஞர்களாக நட்டுவாங்கம் யாழ் பல்கலைக்கழக நடன துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சத்யபிரியா கஜேந்திரன் பாட்டு யாழ் பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் தவமைந்தன் ரொபேர்ட் மிருதங்கம் யாழ் பல்கலைக்கழக நடன துறை மிருதங்க விரிவுரையாளர் க. கஜன் வயலின் யாழ் பல்கலைக்கழக இசைத்துறை முன்னாள் விரிவுரையாளர் கே. வேலதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்நிகழ்வில் மூத்த நடன ஆசிரியைகளான கலாகீர்த்தி சாந்தினி சிவனேசன், கலாபூஷணம் பத்மினி செல்வேந்திரகுமார் ஆகியோர் ஆசி வழங்கினர்நிகழ்வில் பரத நடன ஆசிரியர்கள் பலரும் மற்றும் மாணவர்கள் பலரும் பங்கேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் நிறைவில் அரங்க ஆற்றுகை செய்த அபிநயாவின் பரதத் திறமைக்கு மதிப்பு அளிக்கும் முகமாக சபையோர் ஒரே நேரத்தில் எழுந்து நின்று கரகோசம் செய்து பாராட்டியமை மெய்சிலிர்க்க வைத்தது. அபிநயா – கோப்பாய் வடக்கைச் சொந்த இடமாகக் கொண்டவர் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் தரம் 9 வகுப்பில் கல்வி கற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert