“அக்கினிக்குஞ்சு” வாழ்நாள் சாதனையாளர் விருது- 2019…. கோவிலூர் செல்வராஜன். ( நோர்வே )

“அக்கினிக்குஞ்சு” வாழ்நாள் சாதனையாளர் விருது- 2019…. கோவிலூர் செல்வராஜன். ( நோர்வே )
“அக்கினிக்குஞ்சு” வாழ் நாள் சாதனையாளர் விருது 2019 கோவிலூர் செல்வராஜன்  அவர்கள் முத்தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காக பெறுகின்றார்.
 எழுத்தாளர்,கவிஞர்,நடிகர்,பாடலாசிரியர்,பாடகர்,இசையமைப்பாளர்,வானொலி,மேடை அறிவிப்பாளர்,தயாரிப்பாளர், ஊடகவியலாளர்,சஞ்சிகை ஆசிரியர்,
வெளியீட்டாளர் என்று பல துறைகளில் தனது ஆளுமையையும்,ஆற்றலையும், 1970 லிருந்தே
தொடங்கி இன்று வரை ஓயாமல் தமிழுக்கும்,தமிழ் கலாசார விழுமியங்களுக்கும் தன்னால்
முடிந்தவரை பங்களிப்பு செய்து வருபவர் திரு.கோவிலூர் செல்வராஜன்.கிழக்கு மாகாணம்,
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் என்ற வரலாற்று சிறப்பு மிக்க ஊரை, சொந்த ஊராக
கொண்டவர்.புலம் பெயர்ந்து நோர்வே( ஒஸ்லோ),ஐக்கிய ராச்சியம் (லண்டன்) என்று வாழ்ந்தாலும்
தாயகநினைவுகளின் உபாசகராகவே வாழ்ந்து வருகின்றார்.
படைப்புகள்
——————–
இளமைக்கோவில் ஒன்று   (நாவல்)
மலைக்கோட்டை மர்மம்   (சிறுவர் தொடர் கதை)
படகுத்துறை அருகினிலே (நாவல்)
லாவண்யா ஒரு முற்றுப்புள்ளி (நாவல்)
விடியாத இரவுகள்  (சிறுகதை தொகுப்பு) தமிழ்நாடு லில்லி தேவசிகாமணி விருது 1997
மண்வாசம்   (கவிதை தொகுப்பு)
புதுக் கோலங்கள் (மெல்லிசைப் பாடல்கள் தொகுப்பு)
தேசத்தின் தென்றல்  (தாயக உணர்வுப் பாடல்கள் )
பக்திப்பாடல்கள்  (தொகுப்பு) பக்திபாடல்கள்  இறுவட்டுகள் (6)
இல்லாமல் போன இன்பங்கள்  (கட்டுரைத் தொகுப்பு).
ஊருக்குத் திரும்பணும் (சிறுகதை தொகுப்பு)
கொத்து ரொட்டி    (சிறுகதை தொகுப்பு)
வலைக்குள் விரிந்த வண்ணங்கள் (கதம்பம்)
விருதுகள்
===============
மென்னிசைக் கவிஞர்.ஜெர்மனி தமிழ் மன்றம் (1994)
தந்தை செல்வா விருது. உலகதமிழ் பேரவை  (1996)
லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது. தமிழ்நாடு.கோயம்புத்தூர் (1997)
முத்தமிழ்வாருதி அரியநாயகம் விருது. திருக்கோவில் (2000)
முத்தமிழ் காவலர். லண்டன் தமிழினி விருது. (2008)
கவிதைக் காவியர்.  லண்டன் ஸ்கைடோன் கிறிஸ்தவ இணையம் லண்டன்.(2012)
திருவூர்க்கவிராயர்.  கனடா கிழக்கிலங்கை தமிழர்  (2013)
கனடா உதயன் பல்துறைக் கலைஞர் சர்வதேச சிறப்பு விருது (2017)