அஜந்தனின் எழுத்து, இயக்கம், நடிப்பில் உருவான „ஏணை“

 

பிரான்ஸில் அஜந்தனின் எழுத்து, இயக்கம்,
நடிப்பில் உருவான „ஏணை“முழுநீள திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து திரையிடலுக்கு தயாரான நிலையில்.
அந்த விபரத்தை கலையுல நண்பர்களோடும் என்னோடும் பகிர்ந்து கொண்டார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததோடு மட்டுமல்ல அண்மையில் „உரு’குறும்பட திரையிடலின் போது நேரில் என்னை சந்தித்வேளை வெளியீட்டு விபரத்தை கூறி மகிழ்ந்தார். எப்போ வெளியீடு போன்ற விபரங்களை அவரே விரைவில் அறிவிப்பார்.
ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவர்கள் படைப்பு குழந்தைப்பிரசவம் மாதிரி வலியுடன் கூடிய இனிய சுகம்! அஜந்தனின் முழுநீள திரைப்படக்குழந்தை சுகப்பிரசவமாகி வெற்றிபெற பாரிஸ் பாலம் படைப்பகம், பிரான்ஸ் சுபர்த்தனா (மூவிஸ்)படைப்பகம் , ஆகியவை சார்பாக எங்கள் வாழ்த்துக்கள்.
அஜந்தன் தாயகத்திலிருந்தே கலையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அவர் எனக்கு அறிமுகமானது G.T.V. தொலைக்காட்சியில் குருபரனும்,கொலின்ஸும்,தயாரித்து நானும் நண்பர் இரா குணபாலனும் இணைந்து வழங்கிய KING OF முசுப்பாத்தி நிகழ்ச்சியூடாகத்தான்.ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் அவரது ஆற்றல் அவர் கலந்து சிறப்பித்த அந்த நிகழ்ச்சியினூடக நன்றாக அறியப்பட்டது.
பின்னர் அவர் என்னுடன் இணைந்து பாரிஸில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் பல்கலைஞானன் பரா அவர்களின் „கடைவிரித்தேன் கொள்வாரில்லை“ நாடகத்தில் ஆப்பிரிக்க இளைஞனாக நடித்து பாராட்டுப் பெற்றார்.
குறும்படப்போட்டிகளில் அவரது „கல்லுச்சாறி“
குறும்படம் வெற்றிபெற்றது.நடிப்பு இயக்கம் என்று அசத்தல்.
பாரிஸில் நடைபெற்ற நாவலர் குறும்படப்போட்டியில் 2017) இவர் நடித்த „வேடம்“என்ற குறும்படத்தில் சிறப்பாக நடித்தற்காக சிறந்த நடிகனுக்கான விருதைப்பெற்றார்.
இப்படி இன்னும் பல ஆற்றல் திறன் கொண்ட இளம்படைப்பாளி அஜந்தன் „ஏணை“திரைப்படத்தை வெளியிட்டு மாபெரும் வெற்றி பெற வாழ்த்துவதோடு இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்.கலைஞர்கள், மற்றும் இப்படத்திற்காய் பலவகையிலும் உதவியவர்களுக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துக்கள்
இளம்படைப்பாளி அஜந்தன் வாழ்நாளில் இன்னும் பல சாதனைகள் படைக்க இறையாசியுடன் கூடிய நல்வாழ்த்துக்கள்.(K.P.L)
ஒளிப்படத்தில் அஜந்தன், கே.பி.லோகதாஸ்.