அன்று இட்ட தீ..!

பொறாமை
எனும்
பொறி. சிங்களத்தின்
அறியாமையின்
ஆவேசத் தீ..
இன
அழிப்புக்கான
ஆரம்ப பொறி.
ஆசியாவில்
நிமிர்ந்து நின்ற
அறிவாலயம்.
தீக்கிரையானது.
அறிவின்
உச்சம் கண்டு
ஆவேசத்தின்
உச்சம்
வெகுண்டது சிங்களம்
மூண்டது தீ.
அழிந்தது
அறிவாலயம்.
அதிர்ச்சியால்
வணபிதா
மூச்சிழந்தார்
மாணவர்கள்
பேச்சிழந்தனர்.
சர்வம்
பார்வையிழந்தனர்.
ஆவணமாயிருந்த
ஆதார ஏடுகள்
வரலாற்று சான்றுகள்
பல இலட்சம் நூல்கள்.
வெந்து சாம்பரானது.
முழுத் தமிழும்
கண்ணீரில் கரைந்தது.
மாறாத வடுவாய்
ஆறாத றணங்களாய்
அன்று இட்ட தீ
தமிழர் மனங்களில்
நின்றெரிந்த படியே..!

ஆக்கம் கவிஞர் ரி .தயாநிதி