அமைதியான ஒரு ஆரவாரம்.! வெற்றி மணியின் „விருதும் விருந்தும்“

அமைதியான ஒரு ஆரவாரம்.!

வெற்றி மணியின் „விருதும் விருந்தும்“ நிகழ்வு.!

மழைவிட்டாலும் தூவானம் விடாது என்பது போல எப்போதோ முடிந்த விழாவைப்பற்றி

இப்போது என்ன விமர்சனம் என்று கேட்கலாம்.விழாவின் சிறப்பைப்பற்றி எத்தனையோ தொகுப்புகள்; வந்து கொண்டே இ.ருந்தன.நான் அப்போது எழுதியிருந்தால் பத்தோடு பதினொன்றாய் இதுவும் இருந்திருக்கும். இப்போது இது தனித்துவமாய்த்தெரியும் அதற்காகவே தாமதமாக்கினேன் என்று எழுதலாம்.இதுவும் ஒரு நப்பாசைதான்.

அதனால் நிறைய எழுதப்போகிறேன் என்று அர்த்தமாகாது.சிறப்பை எழுதாமல் விட்டால் மனம் திருப்தி கொள்ளாது.அதிகம் எழுத நான் அங்கு அதிக நேரம் நிற்கவில்லை .அவசரமாக இன்னொரு விழாவுக்கு போக வேண்டியருந்தது.

மனமின்றி வெளியெறினேன். குறித்த நேரத்தில் விழா ஆரம்பமாகியது.முதலாவது பாராட்டு.
ஆரம்ப உரையில் வெற்றிமணி ஆசிரியர் திரு சிவகுமார் அவர்கள் இதற்கு நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்தார். யேர்மனியில் தற்போதைய நிகழ்வுகள் பெரும்பாலும் சில நிமிடங்கள் மாத்திரம் தாமதமாகி ஆரம்பிப்பதை பார்க்கக் கூடியதாக இருக்கிறது.காலப்போக்கில் குறித்த நேரத்தில்
ஆரம்பமாகலாம்.இது பாராட்டிற்குரியது.

இதற்கு முக்கிய காரணம்.பார்வையாளர்கள் குறித்த நேரத்தில் வருகை தராமல் இருப்பதேயாகும்.இந்நிகழ்வு இதனை சற்று மாற்றியிருந்தது இது.வெற்றி மணி ஆசிரியர் மீது வாசகர்கள் கொண்டுள்ள அன்பையும் அபிமானத்தையும் எடுத்துக்காட்டியது.

பூசகர்களின் வருகை அவர்களின் ஆசீர்வாதம் இவற்றுடன் தொடங்கிய விழா.அமைதியாக தகுதிவாய்ந்த கலைநிகழ்வுகளுடன் ஆரம்பமாகியது.சிறப்பான புகழுரை என்று
நிகழ்வுகள் நகர்ந்து கொண்டிருந்தன;.

வெற்றிமணியின் சிறந்த முயற்சிக்கு இது தேவையே.250 இதழ்கள் வெளிவருவது சாதாரண காரியமா?என்ன? இருபத்தாறு வருடங்கள் இரவு வேலை செய்த இந்த மனிதரால் எப்படி இதுவெல்லாம் சாத்தியமாச்சு என்று பலர் முணுமுணுத்ததை நானும் கேட்டேன்.இதையேதான் எனக்குள்ளும் நானும் கேட்டது.

இடைவேளையின் பின்பு எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.வலுவான சுவையான சிற்றுண்டியைச் சாப்பிட்டிருந்த எனக்கு
ஐந்து நிமிடம் வாழ்த்துரை வழங்குமாறு அறிவிப்பாளர் ரவி வாத்தியார் மேடைக்கு அழைத்தார். இது போதாது என்பதே உண்மை..

வாழ்த்த எனக்குக்கிடைத்த சந்தர்ப்பம். இதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டேன்.92ம் ஆண்டு கொக்சவலாண்ட் தமிழர் ஒன்றியத்தலைவராக இருந்த காலத்தில் இருந்தே இவரை நானறிவேன்.எங்கள் பாடசாலைகளில் நடந்த ஓவியப்போட்டிக்கு நடுவராக இவரை அழைத்திருந்தோம்.

அவரது அதீத உழைப்பும் முயற்சியும் எதிர்காலத்தில் அவர்நோக்கிச் செல்லும் உச்சத்தைத் தொடும் என்று நம்பலாம்.
நல்ல விருந்தும் எழுத்தாளருக்கு அவர் வழங்கிய விருந்தும் இன்னும் உலாவிக்கொண்டே இருக்கிறது. இருக்கும்.

வாழ்த்துக்கள்.என்னையும் அழைத்தமைக்கு நன்றிகள்..
அன்புடன் பொன்.புத்திசிகாமணி.