அம்மா !கவிதை தேவதி

 

கண்ணை போல
எம்மைகாத்து வளர்த்த அம்மா

உன்னைப்போல
உதவயாருமில்லையே

எமக்கு துன்பம் என்றிடில்
இதயம் மிகவும் வருந்துவாய்

எமது மகிழ்வு ஒன்றையே
இரவு பகல் நாடுவாய்

புவியில் எமது பிழை எல்லாம்
பொறுமையோடு தாங்குவாய்

அம்மா உனது பெருமை
உரைக்க
உலகில்வார்த்தை இல்லையே

ஆக்கம் தேவதி தேவராசா

Merken

Merken

Merken

Merken

Merken

Merken