அவள் அப்படித்தான்!

என்னை விரும்பி
ஏறப்பிலேனில் வந்து
ஏழ்மையாய் கதைபேசி
பின்னே தாலியிட்டு
பேரன்பாய்வாழ்தவள்

தன்னை தன்குணத்தை
தனியொருவகைகாட்டி
கன்னி அவள்மனதில்
கரவுகள் தொடங்கியதால்
பின்னே பிரச்சனைகள்
தன்னே வரலாயிற்று

அன்னை எனஆகி
அடுக்களை வேலையுடன்
அறிவு கெட்டு போனதுவோ
ஆசையாய் வந்த வாழ்வை
தோசையை பிரிப்பதுபோல்
பிரித்து போட்டுவிட்டு
வடிவின்றி நின்கின்றாள் இவள்தான்பேதை!

கிடைத்த வாழ்வுதனை
தான் பிடித்த வாதத்தினால்
உரத்தகுரலிலே தவறான
கருத்தை உரைக்கின்ற இவள்
வாழ்வில் ஏது அமைதிதரும்
இவள் தன்மை மாற்றாது !

ஆக்கம் இசைக்கவிஞன் எஸ். தேவராசா