ஆடம்பர வாழ்வு வேண்டி!

ஆடம்பர வாழ்வு
அப்பன் பாட்டன் கட்டிய
அழகிய வீட்டை
அனியாயத்துக்கு
அடமானம் வைத்து …

விடிவு வருமென
விமானம் ஏறி
விண்ணில் பறந்தபோது
கண்களில் இருந்து
மங்கலாகி மறைந்தேபோனது
அடமானம் வைத்த வீடு…

வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி
வானுயர்ந்த வீட்டைக்கட்டி
கடைசிப்பிள்ளைக்குக்
கலியாணத்தைக்கட்டி
கட்டிய வீட்டை சீதனமாகக்
கையில கொடுக்கக்
காத்திருந்த பெற்றோருக்கு…

இளைய மகனாகப் பிறந்தவனே
இத்தனையும் செய்துவிட்டு
ஏதோ ஒரு தேசத்தில்
அகதியென அடைக்கலம் புகுந்து
ஊரை மறந்து உறவுகளை மறந்து
பாச உறவுகளைப் பரிதவிக்கவிட்டு
சிற்றிசன் காட்டெடுக்க
சிரமப்படுவதாக எத்தனை கதைகள்…

ஆடம்பர வாழ்வு ஆட்கொண்டபின்
ஊரெதற்கு உறவெதற்கு
பாசத்தைத் தொலைத்துப்
பணத்தில் புரண்டால்
மோச்சமா கிடைக்கும்
பிச்சையெடுக்கும் நிலையில் பெற்றோர்
கஞ்சிக்கும் வழியின்றிக்
கஸ்ரப்படும் காலக்கொடுமை….

கலியாணம் தடைப்பட்டு
கடன் சுமையால் குடியே மூழ்கி
கையறு நிலையில்
நடுவீதிக்கே வரும் அவலம்
மனக்கோட்டை கட்டி
மகனை வெளிநாடு அனுப்பிவைக்க
மறந்துதான் போனானே…

ஈசன் சரண்.