ஆடிப்பிறப்பு நல்வாழ்த்துகள்!


மானத்தமிழர் விருந்தோம்பும்
பண்டிகைகளில் ஒன்றாம்
ஆடிப்பிறப்பு பெருநாள்
இன்று….
நாம் வாழும்
பூமிப்பந்தின்
சுழற்சியில் ஒவ்வோர்
ஆண்டும் உத்தராயணமும்
தட்சிணாயனமும் ஆரம்பிக்கும்
வேளையில் அரங்கேறும்
பெருநாட்கள் தைத்திருநாளும்
ஆடித்திருநாளும்….
தட்சிணாயன ஆரம்பமாம்
ஆடி முதல் நாளில்
கூலங்கள் விளைந்து
கோடைகாலம் மலர்ந்து
குதூகலமாகும் வேளைதனில்
உறவுகள் கூடி
ஆடிக்கூழும் கொழுக்கட்டையும்
பண்ணியங்களும் ஆக்கி
விருந்தோம்பி மகிழும்
நாள் இன்று…
உயரிய பெருநாளாம்
ஆடித் திருநாளை
உலகெங்கும் வாழும்
தமிழுறவுகள் யாவரும்
நம் பண்பாட்டுப்
பெருநாளைப் பெருமிதமாய்
பாவாக்கிய „தங்கத்தாத்தா“
நவாலியூர் சோமசுந்தரப் புலவரின்
„ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே“
எனப்பாடி
„ஆடிக்கூழ் தேடிக் குடி“ என
உவகை ததும்ப
விருந்தோம்பி
கொண்டாடிவோம்!!!
அனைவருக்கும் ஆடிப்பிறப்பு நல் வாழ்த்துகள்

 

கௌரி மூர்த்தி கண்ணன்