இசைக்கபி கலையகத்தின்பக்திப் பாடல் வெளியீட்டு விழா!

2022 ல் எமது இசைக்கபி கலையகத்தின்முதலாவது இசை வெளியீடாக மல்லாவி பாலவிநாயகர் ஆலய புகழ் பாடும் பக்திப் பாடல் வெளியீட்டு விழா. இந்த வருட முதலாவது இசைப்படைப்பாக விநாயகர் புகழ் பாடும் அந்த வரத்தைத்தந்த இறைவனுக்கு நன்றிகள்.இந்த இறுவட்டு உருவாக்க என்னைத் தெரிவு செய்த அனு அண்ணாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இறுதிவரை அனைத்து பாடல்களும் உருவாக்கி முடியும்வரை ஒருங்கிணைப்பாளராக செயலாற்றிய ஆலய குருக்கள் உருத்திரமூர்த்தி ஐயா அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.என்னோடு இணைந்து பணியாற்றிய என் சக கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.எமது அடுத்த இசை வெளியீட்டு மிக விரைவில்…

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert