இசையெனும் சொத்து சிறீ பாஸ்கரன்

“”சிந்திக்கிடக்கிறது””

அழகிய கலைமகன்-இவன்
ஆயிரம் சிறப்பின் தலைமகன்..
இளகிய மனமும்-பேச்சில்
அழகிய நளினமும்..
அன்றே அறிந்தவர் நாங்கள்..

இவர்
தந்தை மட்டும் என்னைக்
கண்டால் ..
நண்டு என்று அழைப்பார்..
இன்று வரை எனக்கு அது
விடை தெரியா குழப்பம்..???

சிறி !!!
அகலக்கால் பதிக்காத
பெ௫மகன்..
ஆரவாரம் இல்லாத
தமிழ் மகன்…

சிறி !!!
வளர்ந்த மடி கண்டு-அதனால்
வாழுமிடம்..
வி௫ட்சமானது இன்று..

இசையெனும் சொத்து
பொங்கிக்கிடக்கிறது..-அது
சிற்பிக்குள் (சிறி)ய 
முத்துக்களாய்
சிந்திக்கிடக்கிறது..

பிறர் கற்பித்து வந்ததல்ல..
பிறை தானாக வள௫ம்..
அதிசயமும் அல்ல..

வளர்த்த மடி கண்டு-அதனால்
வாழுமிடம் வி௫ட்சமாகி
நிற்கிறது இன்று..

அழகிய கலைமகன்-இவன்
ஆயிரம் சிறப்பின் தலைமகன்..

இன்று..
ஐரோப்பிய மண்ணிலே..
நின்று எய்த அம்பு..
அகில உலக 
இசைப்பாணமாய்..
தெறிக்கிறது வென்று..

கலைதனில்..
ஆழக்கால் பதித்த-எம்
கலைமகன்..
நீடூடி வாழவேண்டும்..
நீடூடி வாழவேண்டும்..
வாழ்த்துகின்றோம்..

அன்புடன்…
கமலன்..