இன்பராகம்

 

மஞ்சம் வந்த தென்றல் ஒன்று
மயங்கிக்கிடக்குது
ஆசைகொண்ட பறவையொன்று
அணைத்துக்கொள்ளுது
நெஞ்சனையை பஞ்சனையாய்
பெண்பறவை நினைக்குது
சிப்பிக்குள்ள முத்தாய்
சிறைப்படவே நினைக்குது

தணலாய் தான் ஆசை
நீறுபூத்தது
நீறுபூத்த ஆசையது
தீயாய் எரியுது
காதல் என்ற பாதையிலே
கடமை செய்யுது
கட்டுப்பாடு என்ற வேலிக்குள்ளே
மோகம் இருக்குது
காமமின்றி காதல் இல்லை
வாழ்க்கைப் பாடம் சொல்லுது

பசுமையிலே பைங்கிளி
பால் நிலா சேதி சொல்லுது
செழுமையிலே காதல்ரசம்
தேனாய் பாயுது
தெவிட்டாத இன்பமென
இதுவும் தோன்றுது.
பொங்கும்இன்ப கானம் இது
காட்சி சொல்லுது.

கவிதை கவிக்குயில் சிவரமணி

Merken