இன்று மே 5ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பரிசில் ஒருத்தி திரையிடல் !

கனடாவில் தயாரிக்கப்பட்டு ரொறன்ரோ, மொன்றியல் ஆகிய இடங்களில் திரையிடப்பட்டிருந்த ஒருத்தி திரைப்படம், நாளை ஞாயிற்றுக்கிழமை பரிசில் திரையிடப்படுகின்றது.

பிஎஸ்.சுதாகரன் அவர்கள் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கனடா, தமிழீழம், தமிழகம் என உலகத் தமிழர்களின் திரைப்படமாக உருவாகியுள்ளது.

மே 5ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 19 மணிக்கு Cinéma CGR Paris Lilas , Place du Maquis du Vercors, 75020 Paris ( Metro : Porte des Lilias ) திரையரங்கில் திரையிடப்படுகின்றது.

இத்திரையிடலுக்காக பிரான்சுக்கு வருகை தந்துள்ள இயக்குனர் பிஎஸ்.சுதாகரன் அவர்கள், பிரான்ஸ் வாழ் கலைஞர்கள், கலைஆர்வலர்கள் மற்றும் பொது மக்களுக்க அழைப்புவிடுத்துள்ளார்.

பரிஸ் திரையிடலைத் தொடர்ந்து லண்டனில் திரையிடப்படவுள்ளது.

Previous“ஒருத்தி“ இயக்குனர் PS. சுதாகரன் அன்பான அழைப்பு !