இலங்கையின் பழம்பெரும் இசையமைப்பாளர் அமரர் ஆர்.முத்துசாமி அவர்களின் நினைவுநாள்.(27.06.1988)

இலங்கையின் பழம்பெரும் இசையமைப்பாளர் அமரர் ஆர்.முத்துசாமி அவர்களின் நினைவுநாள்.(27.06.1988)
——————————————————————————இவருடன் பழகுவதற்கான வாய்ப்பு எனக்கு எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து கிடைத்தது. மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர்….எப்பொழுதும் வெள்ளை வேட்டி சட்டையில் காட்சியளிப்பார்.அந்தக் காலத்தில் இலங்கையில் மிக சிறந்த இசை அமைப்பாளராக இருந்தவர்.தமிழ்,சிங்கள மெல்லிசைப் பாடல்களுக்கு மட்டுமல்லாமல் இரண்டு மொழிகளிலும் வெளிவந்த திரைப்படங்களுக்கும் இவர் இசையமைத்து இருந்தார். இலங்கை வானொலியில் இவர் இசைப்பிரிவில் இசைக்கூடத்துக்கு தலைவராகவும் பிரதான இசையமைப்பாளராகவும் இருந்தார்…நான் பணியில் சேர்ந்த ஆரம்ப காலங்களில் இவர் இசைகூடத்துக்கு சென்று இவருடன் அளவளாவுவதுண்டு.அவர் இசையமைக்கும்போது கலையகத்தில் சென்று பார்ப்பதுண்டு.ஒருநாள் அப்படியே சென்று பார்த்துக் கொண்டிருந்த வேளையில் திருமதி விசாலாட்சி ஹமீத் அவர்களுக்கு மெல்லிசைப்பாடல் நிகழ்ச்சிக்காக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.அவருக்கு கிடைத்த மூன்று பாடல்களில் ஒன்று திருப்தியளிக்கவில்லை.அப்பொழுது விசாலாட்சி அக்கா என்னிடம் வந்து சொன்னார்.“கோவிலூர் நீங்கள் ஒருபாடல் எழுதி கொடுங்களேன்..முத்துசாமி மாஸ்டரும் ஊக்கப்படுத்தினார்..நான் பத்திரிகை துறையில் இருந்து வானொலிக்கு வந்தவன் என்பதால் அவர்கள் அப்படி கேட்டார்களோ தெரியவில்லை சரி எழுதுகிறேன் என்று சொல்லி ஒரு பாடல் முதல் முதலாக எழுதிக் கொடுத்தேன்.முத்துசாமி மாஸ்டருக்கு மிகவும் பிடித்துவிட்டது.உடனே அதற்கு மெட்டு போட்டு இசையமைத்தார்.விசாலாட்சி அக்காவும் விருப்புடன் அழகாக அந்த பாடலை பாடினார்.அதுவே எனது முதலாவது மெல்லிசைப்பாடலாகும். „நீலக்கடலினிலே நீந்திவரும் அலையே“என்ற பாடல்…இன்றும் ஒலிக்கிறது..அதன்பின் அவர் மகன் மோகன்ராஜ் அவர்களுக்கு நிறைய பாடல்கள் எழுதியது வேறுகதை…திரு.ஆர்.முத்துசாமி அவர்கள்தான் என்னை ஒரு பாடலாசிரியர் ஆக்கினார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

தகவல் கோவிலுர் செல்வராஐன்