ஈழ நாட்டியம் உணர்வுப் பெருக்கு

ஈழ நாட்டிய நிகழ்வு 29.02.2020 சனிக்கிழமை லண்டன் பாக்கிங் ரிப்பில் அரங்கில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் அரங்கு கண்டது.

இளையோர் முதல் முதியோர் வரையிலான பார்வையாளர்கள் மத்தியில் ஈழ நாட்டியம் உணர்வெழுச்சி அலையை உருவாக்கிய நிகழ்வாய் அமைந்தது என்பதை நிகழ்வு முடிந்த பின்னரான உரையாடல்கள் சொல்லிச் சென்றன.

நாட்டார் கதம்பம் நிகழ்வின் கடைசி நிகழ்வாகவே ஈழ நாட்டியம் அமைந்தது ஆனாலும் கூட்டம் குறையாமல் மண்டபம் நிறைந்திருந்தது.ஈழ நாட்டியம் பார்ப்பதற்ககாகவே காத்திருந்தோம் என பலரும் சொல்லிச் சென்றனர்.காத்திருந்ததுக்கு பெறுமதியான நிகழ்ச்சி என்று சொன்னதோடு அரங்காளர்களை வாழ்த்தியும் சென்றனர்.

வயது முதிர்ந்த அம்மா ஒருவர் நிகழ்வு முடிய அரங்கின் பின் பகுதிக்கு வந்து என் கையை பிடித்து கொஞ்சி தனக்கு ஈழ நாட்டியம் பார்க்கும் போது மயிர்க்குச்செறிந்ததாக கண்கள் பனிக்க நின்றார் பெரு உணர்ச்சிப் பெருக்கான தருணம் அது.

மற்றுமொரு நபர் ஒரு திரைப்படத்தின் நேர்த்தியான காட்சி ஒன்று அசைய விடாமல் கட்டிப் போட்டிருக்குமே அப்படி இருந்தது என்றார் இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம் போத்தாது போல இருந்தது.கிட்டத்தட்ட இருபைத்தைந்து நிமிட ஈழ நாட்டியக் கோர்வை.

நண்பர்கள் பலர் வந்திருந்தனர் பாராட்ட வார்த்தையில்லை ஆடகிகள் அற்புதம் நிகழ்த்தி ஈழக் கலைக்கு புதிய அர்த்தம் கொடுத்துள்ளனர் என்று பாராட்டிச் சென்றனர்.

இது எங்கள் கலை இன்னும் நாங்கள் என்ன செய்ய வேணும் என பலரும் கேட்டு தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

இந்த உந்துதல்கள் அடுத்த கட்டத்துக்கு ஈழ நாட்டியத்தை கொண்டு சேர்க்க வழி சமைத்துள்ளது.

விரைவில் கிழக்கு லண்டனில் Institute of Eezanaddiyam ஈழ நாட்டிய கற்கைகள் நிலையம் உருவாகுவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன