உதயம் தொண்டு நிறுவனத்தின் பூபாளம் 08.06.2019 சிறப்பாக நடந்தேறியது

உதயம் தொண்டு நிறுவனத்தின் பூபாளம் ஒன்றுகூடல் , தாளம் இசைக்குழுவினரின் முதன்மை அனுசரணையோடு நேற்று நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரை அருட்திரு பிராங்கிளின் , கம் காமாட்சி ஆலய ஆதீனகர்த்தா பாஸ்கரக்குருக்கள், அகரம் இதழ் மற்றும் ஐரோப்பியத் தமிழ் வானொலி தலைமை இயக்குநர் இரவீந்திரன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து அகவணக்கத்தோடு நிகழ்வு ஆரம்பமானது.

கும்மிநடனம், கரகம், காவடி ஆகியநடனங்களோடு நிகழ்வு கலகலப்பாக ஆரம்பித்தது.

தாயகத்தில் கடந்த மூன்றுவருடங்களாக உதயம் மேற்கொண்ட பணிகள் அதற்கான செலவுகள், ஆகியன விழியமாகவும் ஒளிப்படங்களாகவும் காண்பிக்கப்பட்டன. கடந்த நான்குவருடங்களாக ஏறக்குறைய அனைத்துமாவட்டங்களிலும் உதயத்தின் பணிவிரிவடைந்திருப்பதைக் கண்ட உறவுகள் கரவொலி எழுப்பி ஆரவாரித்தனர்.

போராளி குடும்பங்கள், முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரம், விவசாயம், கல்வி மற்றும் மறுசீரமைப்பு, மருத்துச்சிகிச்சைகளுக்கான உதவி ஆகியவற்றின் பிரிவுகளில் உதயம் இதுவரை நாளும் செய்த பணிகளின் செலவுவிபரத்தை கணக்காய்வாளர் திரு-வலன்ரைன் அவர்கள் வெளியிட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து உதயம் செயற்பாட்டாளர் தேவன் உதயம் தொண்டுநிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிவிதந்துரைத்தார்.

தொடர்ச்சியாக திருகோணமலையில் நடைபெறும் நிலப்பறிப்புத் தொடர்பாக யாழிலிருந்து உதயம் தொண்டுநிறுவனத்தின் சகோதரச் செயற்பாட்டாளர்களான ஊறுகாய் (Oorukai.com) இணையத்தளச்செய்தியாளர்கள் தயாரித்த விவரணப்படம் காண்பிக்கப்பட்டது.

தாளம் இசைக்குழுவின் இசையில் தாயக எழுச்சிப்பாடல்களும் திரையிசைப்பாடல்களும் சிறப்பாக இசைக்கப்பட்டன.

நிகழ்வில் உதயம் தொண்டுநிறுவனத்தின் செயற்பாட்டாளர்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டு தேசியத்தலைவரின் சிந்தனைகள் பொறிக்கப்பட்ட படங்கள் பூபாளம் நிகழ்வின் நினைவுச்சின்னமாக வழங்கப்பட்டன. ஏறத்தாள உதயம் தொண்டு நிறுவனத்தின் 30 செயற்பாட்டாளர்கள் மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டார்கள்.

நிகழ்வின் இறுதியில் Warendorf நகர இளையவர்கள் தொகுத்து வழங்கிய பண்டாரவன்னியன் நாடகம் இடம்பெற்றது. 11.30 மணியளிவில் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
[13:44, 9.6.2019] Bottrop Varathan: உதயம் தொண்டு நிறுவனத்தின் பூபாளம் ஒன்றுகூடல் , தாளம் இசைக்குழுவினரின் முதன்மை அனுசரணையோடு நேற்று நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரை அருட்திரு பிராங்கிளின் , கம் காமாட்சி ஆலய ஆதீனகர்த்தா பாஸ்கரக்குருக்கள், அகரம் இதழ் மற்றும் ஐரோப்பியத் தமிழ் வானொலி தலைமை இயக்குநர் இரவீந்திரன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து அகவணக்கத்தோடு நிகழ்வு ஆரம்பமானது.