‚உரு‘ குறுந்திரைப்பட நிகழ்வு அரங்கம் நிறைந்த பார்வையாளர்களோடு சுஐீத் .ஐீ

நேற்று 06.01.2018ல் ‚உரு‘ குறுந்திரைப்பட நிகழ்வு அரங்கம் நிறைந்த பார்வையாளர்களோடு நடந்து முடிந்தது. எனக்குத்தெரிய இங்கே ஒரு குறும்படத்தை 400ற்கு மேற்பட்டவர்கள் வந்தது பார்த்தது இதுவே முதல்முறை! எம் முழு நீளத்திரைப்படங்களுக்கே இப்படி மக்கள் கலந்து கொள்வது இல்லை. ஆக இந்த நிகழ்வு எமக்குச் சொல்லுகிற விடயங்கள்…

1). எமது வாழ்வியலை மையப்படுத்தி யதார்த்தத்தோடு உருவாக்கப்படுகிற படைப்புகளுக்கு மக்களிடம் எப்போதும் ஆதரவு உண்டு. முக்கியமாய் அவர்களை அது ஏமாற்றாது.

2). ‚உரு‘ இயக்குனர் Gnanadas Kasinathar முன்னொருமுறை முகநூலில் எழுதியது போல ஒரு கட்டம் வரை நாம் ‚ஊர் கூடித்தான் தோ் இழுக்கவேண்டும்‘ அவர் லண்டனில் வெறுமனே முகநூல் மூலமாகவோ தொலைபேசியிலோ மட்டுமல்லாமல் நேரே சென்றும் பலரை சந்தித்ததாய் / அழைத்ததாய் சொன்னார். எம் படைப்பாளிகளின் மேலும் படைப்புகள் மேலும் எம் மக்களுக்கு நம்பிக்கை வரும் வரை அது தேவை!

3). படைப்பு தரமான முறையில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் அதற்கு படைப்புக்கள் சார்ந்த அக்கறையுடன் படைத்தல் பற்றிய அறிவையும் படைப்பாளிகள் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

மேற்சொன்ன மூன்றும் ஒரு சேருகிறபோது ‚நேற்று’க்கள் பல நாளை வழமையாகும். ஆக உரு திரையிடல் நிகழ்வு புலம்பெயர் தேசத்துக்கு மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழுகிற ஈழத்தமிழ்ப் படைப்பாளிகட்டு ஒரு மாதிரி ( Model ) ஐ உருவாக்கி நிற்கிறது.