எங்கள் தலைவர்

நடந்திட அதிரிடும் நானிலமும் – இவர்
தடந்தோ ளெழும் உயர் தமிழ்உரமும் – அது
படர்ந்தே விரிந்திட தமிழ் நிலமும் – இவ
ரிடமே இருந்தன வாழ்வறமும்

உறுதி மனம்கொண்ட உணர்வெனும் தீ – இவர்
குறுந்தீ யலபெரும் எரிமலை தீ – மையும்
அறு தீர் வெடு என ஆற்றுஞ்செயல்- அதில்
பெறுந்தாய் ஈழமும் பெரிது நலம்

வெள்ளமும் பொங்கிட ஆறோடும் – அது
கொள்விரி கடலென புகழ் பரவும் -நல்
லுள்ளமும் பெரிதெனும் ஆகாயம் அதில்
எள்ளென வும் இலை பயம்சிறிதும்

கண்களும் எதிர்வரும் காலமெண்ணும் – அதில்
எண்களை வகுத்திடும் இளமனதும் – ஒரு
வெண்கல்லின் பளிங்கெனும் விதமுறுவல் – அதில்
மண்கொள்ளும் மகிமையின் திறன் உதிக்கும்

எங்கும் சுதந்திர இசைமுழக்கம் – இவர்
செங்களம் புகின் பகை சிதறி விழும் -மனம்
பொங்கி மகிழ்வொடு உயிரெடுப்போன்- பகை
சிங்கம் மெதிர்த்தவர் திறன் போற்றும்

நாடகமில் இது நடைமுறையாம் இவர்
ஆடலில் சிவனிலை ஆயினும்காண் -பெரு
தேடலில் இவர்கொண்ட விஸ்வரூபம் ப;ல
கூடலில் தேசங்கள் குமுற வைத்தே

படைமூன் றுடன் எழப் படபடக்கும் – உடல்
கிட ஈ தழிவென பகை வன் மனம் – இனி
விடமே வழியென கரமெடுக்கும் – இதை]’
விட நேர் மையதை மனம் மறுக்கும்

கடந்தன நீதியும் நேர்மைகளும் – துயில்
கிடந்தன தெய்வமும் திருவருளும் கொல்ல
படமெடுத்தாடின பாம்புகளும் – இனி
இடர் போய் கதிர்கிழக் கெழ விடியும்!

கிரிகாசன்