எசன் தமிழ் கலை கலாச்சார மன்றத்தின் தமிழ் பாடசாலையின் ஆண்டு விழா!03.11.2018

  • முப்பது ஆண்டுகள் சேவை
    முழங்கும் முரசு!
    எசன் தமிழ் கலை கலாச்சார மன்றத்தின் தமிழ் பாடசாலையின் ஆண்டு விழா நிகழ்வு இன்று !

முப்பது ஆண்டுகள் சிறப்பாக இயங்கி வரும் எசன் தமிழ்ப் பாடசாலையின் ஆண்டு விழா 03-11-2018ம்திகதி இன்று எசனில் கொண்டாடப்பட இருக்கிறது.
இதன் சேவை அளப்பரியது. இக்காலத்தில் சிறந்த முறையில் தமிழ்க்கல்வி கற்று பல நூறு மாணவர்கள் வெளியேறி இருக்கின்றார்கள்.இன்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள்.
தமிழ்க்கல்வி கல்வி மட்டுமல்லாது.கலை கலாச்சார விளையாட்டு நிகழ்வுகளிலும் இப்பாடசாலை, முதன்மை பெற்றுவருகிறது.
இதனை ஆரம்பித்த திருதிருமதி வேலாயுதம் ,ஈஸ்வரி தம்பதிகள் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்கிறார்கள்.
நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை பல சோதனைகளைத் தாண்டி வெளியில் வந்து தனது சேவையை சிறப்பாக செயல்பட்டமைக்கு இந்த தம்பதிகளே முக்கியமானவர்கள்.இன்று லண்டனில் வசித்துவரும் இவர்களை அழைத்து இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கெளரவிப்பது இப்பாடசாலை நிர்வாகத்தினரதும்,பெற்றோர்,ஆசிரியர் மாணவச்செல்வங்களினதும் சிறப்பான செயற்பாடாகும்.நாமும் வாழ்த்துகிறோம்.

நீண்ட காலம் பாடசாலை போட்டி நிகழ்வுகளில் நடுவராகக் கடமைபுரிந்தவன் என்ற ரீதியில் அனைத்தையும் கவனித்து வருகிறேன்.என்னுடன் சேர்ந்து செயல்படும் நண்பர்கள் அனைவர்கள் சார்பாகவும் இச்செய்தி அமைகிறது.இவ்விழா இன்று சிறப்பாக அமைய எமது வாழ்த்துக்கள். இன்னும் பல ஆண்டுகள் சிறந்த சேவையை ஆற்றி மாணவர்களை தமிழ்க் கல்வியில் சிறப்புற, செயலாற்ற வேண்டும் என நிர்வாகத்தினரையும்,ஆசிரியர்களையும்,பெற்றோரையும் அன்போடு கேட்டுக் கேட்டுக்கொள்ளுகிறோம்.
நன்றி.

அன்புடன் பொன்.புத்திசிகாமணி.