என் முதல் கவிதை !

 

பொட்டு வெயில்
………….என்மேல் பட்டதற்கு,
பட்டுப் புளுவாய்
………….துடித்தவள் நீயல்லவோ…
தூறல் மழைத்துளியின்
………….சிறுதுமி பட்டதற்கு,
பதறியடித்து பக்குவமாய்
………….ஒத்தணமிட்டவளும் நீயல்லவோ…
தட்டுத்தவறி
………….தரைதனில் விழுந்திட்டால்,
தாயே நீதான்
………….தவியாய் தவித்திடுவாய்…
சற்று நேரம்
………….உன்னருகில் இல்லையென்றால்,
சலனப்பட்டு
………….நீயென்னைத் தேடிடுவாய்…
„அம்மா“ என்ற குரல்
………….உன்காதில் கேட்டுவிட்டால்,
கைதொட்ட வேலையென்றாலும்
………….விட்டுட்டு வந்திடுவாய்…
கண்ணை இமைகூட
………….அப்படிக் காப்பதில்லை!
உண்ண உணவு
………….உனக்கில்லை என்றாலும்,
என்பசி தீர்த்து
………….நீ மனம் மகிழ்ந்திடுவாய்…
காக்கைக்கும் தன்குஞ்சு
………….பொன்குஞ்சுதான் – ஆனால்,
அம்மா உன் ஆனந்தம்
………….பிள்ளையென் சந்தோசம் தானே !
அன்னையுன் அன்பு
………….என்னோடு இருக்க,
துன்பமென்ன, துயரமென்ன
………….எட்டக்கூட முடியாதம்மா..!
– வேலணையூர் ரஜிந்தன்.