என் வானத்தில் ஒரு நட்சத்திரம்

வார்த்தைகளால்
சொல்லத்தெறியாமல்
என் வானத்தில்
கல்லெறிந்து போகிறது
ஒரு நட்சத்திரம்

சிறகு முளைக்காத
பறத்தலின் முயற்சியில்
மெளனத்தால்
சீண்டிப் பார்க்கிறது
ஒரு மேகக்கூட்டம்

சத்தமின்றி
ராகம் இசைக்கும்
வண்ணத்துப்பூச்சிகள்
வண்ணங்களுக்கு பதிலாக
கண்ணீர் வடிக்கின்றன
களவு போன
என் கவிதைக்காக

நேற்றைக் கொன்றவர்கள்
இங்கே
இன்றும் வாழ்கிறார்கள்
நாளையில்
தொலைந்து போவதற்காக

தாயின் 
கரம் பற்றிச் செல்லும்
பிஞ்சிக் கரங்களோடு
பின் தொடர்கிறேன்
எனக்கான
புதிய சொற்களைத் தேடி

நந்தவனம் சந்திரசேகரன்