ஐயமேயில்லை ஆக்கம் சுபாரஞ்சன்

கல்வியும் கற்பித்தலும் ஒரு சமூக மாற்றத்தின் சாவியாக இருப்பதில் ஐயமேயில்லை……..

கடந்த ஞாயிற்றுக்கிழமை கடுங்குளிர் காற்று பனி என்று இயற்கைச் சமநிலை பாதிக்கப்பட்ட நாளில் பேரனாரோடு ஒரு 12 வயதுக்குழந்தையும் என்வீட்டுக்கதவை தட்டியபடி நின்றுகொண்டிருந்தனர்.ரெட்குறோஸ் அமைப்பினூனாக சிறிது பணம் சேர்த்து
பசித்திருக்கும் ஆபிரிக்க குழந்தைகளுக்கு அனுப்பி உதவி செய்யப்போகிறேன் எனக் கூறியது.

இருக்கும்போதும் இல்லாதபோதும் வாழ்வதற்கு வாழ்வுச் சமநிலையை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். வசதிபடைத்த இந்தநாட்டுக்குழந்தை அதைச்செய்வதற்கு முயற்சிக்கிறது என்றால்,அழுத்தங்களோ திணிப்போ இல்லாது அன்பாகப் புரிய வைத்த அந்தப்பெரிய மனிதர்தான் காரணமாயிருக்கும்.

உணர்வதற்கும் உணர்த்துவதற்கும் பெரியவரோ சிறியவரோ பெருங்கற்பிதங்களோ தேவையில்லை சிறிய சம்பவங்களே
போதுமானது.