ஒரு மூதாட்டியின் பருவநிலை!

நெஞ்சம் துடிக்கிறது
நேரம்போகவில்லை
மனம் கலங்கிறது
மகிழ்ச்சி குறைகிறது

கன்னம் சுருங்கிவிட்டது
கன்னத்தில் குழியும் விழுந்துவிட்டது
கண்ணின் மணியும் மங்கிறது
கண்பார்வையும் குறைகிறது

மூக்கும் முகர்வதில்லை
மூக்கடைப்பும் ‌போவதில்லை
பற்களும் நோகின்றன
பற்களின் சுவையும் குறைகின்றன
நன்றாக பேசமுடியவில்லை
நாவும் தடக்கிறது-கைகளின்

நரம்புகளும் தளர்கின்றன
கால் நடைகளும் குறைகின்றன
கலங்கி மனம் தவிக்கிறது
உச்சி துடிக்கிறது
உள்ளங்கால் நோகிறது
உணவும் செல்லவில்லை
உறக்கமும் வருவதில்லை
மனம் ஓய்ந்து விட்டது
மன அலையும் பாய்வதில்லை

பெற்ற கருவறை நோகிறது
பெற்ற பிள்ளை பாசம் குறையவில்லை
அம்மை அப்பனே அன்பைக்காட்டுங்கள்
அருளைத்தந்து அழைத்துக்கொள்ளுங்கள்

ஆக்கம் ஆசிரியர் அங்கயற்கண்மணி இளையதம்பி