ஒளிப்பார்வை

பெண்ணென பூமியில்
பூத்திட்ட பொற்கொடி
கண்ணென பிறந்திட்ட
கவிமங்கை மாதினி
பொன்னென மிளிரும்
பொன்நகை நங்கை
மெல்லின மேனியாள்
மேதினிக்கே மோகினி

பிரம்மனின் சூத்திரத்தில்
பிறந்திட்ட பிரளயம்
காவியமே ஓவியம்
கண்டதும் ஆச்சரியம்
ஒருபெண் ஓராயிரம் மோனம்
ஒவ்வாது பொழுதும்
ஒரு நொடி பார்த்தால்
ஓடிடும் காலம்

கண்ணீர் சிந்திடும் மாது
கலங்கிய நிலையது கேளீர்
பன்னீர் தெளித்திடும் அழகில்
பாலையென நீர் அகற்றியதாரோ
கொஞ்சிடும் விழியில்
சோகம் மிஞ்சிடும் கோலம்
தந்திடும் பாவை
தரணிக்கு இவளே ஓவியப்பாவை

ஒவியப் பாவை ஒழிந்தாளோ
பத்திரம் தேடி படமானாள்
சித்திரவிற்பன்னருகளுக்கு கருவாகி
சிறந்த ஓவியப் பாவை தானானாள்
கற்பனை கரைதேடிட கலையும்
கவிதைகளும் ஊற்றாயின
காலக்கிடங்கில் மறையாது
காற்றுவெளியிடை கானமோ ?ஓவியப்பாவை.

திருகோணமலை சிவரமணி