ஓ வசந்தமே வா….கவிதை.ரதிமோகன்

 

மெல்ல அரும்பிய
மொட்டுக்கள்
வசந்தம் என்றது…..

சிறகடித்த பறவையொன்று
காதல் செய்யும் காலமிது
காதோரம் கிசுகிசுத்தது
ஓ வசந்தமே வா
இதயம் ஆனந்தத்தில்
துள்ளியது……

துளிர் விட்ட மரங்கள்
பச்சை வர்ணத்தை
எங்குதான் கடன்வாங்கி
பசுமைப் புரட்சி செய்கிறதோ…

காத்திருந்த கதிரவனின்
ஒளிக்கரங்கள்
லாவகமாய்
அணைத்திருக்க
வசந்தம் வாசல்
தொட்ட வேளை…..

அதிகாலையில்
சில்லென்ற காற்றுடன்
ஜில்லென்று உடல் நடுங்க
ஓயவில்லை இன்னும்
குளிரென்றது……

களிப்படைந்த மனசு
சலிப்படைந்தாலும்
பருவத்தின் மாற்றங்கள்
காலத்தின் கோலங்களென
சமாதானம் சொல்ல…..

வசந்தம் வரும் நாளையென
விழிமலர்கள் எதிர் பார்ப்புடன்
மலர்கின்றன…

ஆக்கம் ரதிமோகன்