கல்வி !கவிதை இணுவை யூர் சக்திதாசன்

காலத்தால் அழியா சொத்து
கருத்தில்கொண்டு உழைத்தால்
இளைஞர்களின் வாழ்வழியாச் சொத்து

கல்வியை ஊட்ட / நம்
பெற்றோர் பட்ட பாடு எத்தனை
தந்தைக்கு பயந்து படித்தோம் அன்று
தாயும் அதற்கு இசைந்து ஊட்டினால் தெம்பு

விந்தையுலகில் இன்று கணணி
தந்தைக்கு வேலையில்லை கவனி
சிந்தையில் பாட்டு
காதுக்குள் தாலாட்டு ..
சிரித்தபடி பிள்ளை கணணிக்குள் …

அறிவூட்ட தந்தை சோறுட்ட தாய்
அதிகாரம் தந்தைக்கு இல்லை யென்றால்
அன்னை தந்தைக்கு / முதலில்
மரியாதையை கொடுக்கவில்லையென்றால்
பிள்ளைகளிடம் தந்தை எதிர்பார்ப்பதே தவறு

அறிவுக்கே இங்கே அரிதாரம் பூசி
அரிக்கன் லாம்பில் தான் ஒளி …
மின்குமிளுக்கே மெழுகு பூசி
மின்மினி பூச்சியாய் தான் ஒளி !

சுயமாய் படித்த பிள்ளை ஊருக்குள்
உயர்ந்த படிப்பெல்லாம் படித்திங்கே பாருக்குள்
பெற்றோரை பெருமைப் படுத்தி …
தன் இனத்துக்கும் பெருமை சேர்க்கும் !!

“ ஈன்ற பொழுது பெருதுவக்கும் . தன் மகனை சான்றோன் என கேக்கும் தாய் “‘

ஆக்கம் இணுவை யூர் சக்திதாசன்