கவிஞர் தயாநிதியின் வாழ்ந்து பார்.

ஆடம்பரம்
ஏதுமில்லை.
ஓடி ஒதுங்க
இடமும் தேவையில்லை
வந்து பார்
வாழ்ந்து பார்.
என்
உள்ளுணர்வை
சொல்ல
விரும்புகின்றேன்.
சொன்னது
பிடித்ததென்றவர்
ரசித்தவர்
சிரித்தவர் மகிழ்ந்தவரும்
முரண்படுகின்றனர்?
நடிப்பவரை
நம்புகின்றார்
பாத்திர தன்மைகளை
புரிந்திட
முடியாத மாயைக்குள்
மண்டியிட்டு
மடிகின்றார்.
பார்
தளம் விரிக்க
விஞ்ஞானம்
தலை விரிக்க
அண்மைக் கால
தொடுப்புக்கள்
வட்சப் வா வைபர் வா
என விடுப்புக்கள்.!
ஏராள
சீரழிவு பாரெல்லாம்
பல தவிப்பு
தாராள
சிந்தை விரிப்பு
பாதாள
உலகை நோக்கி.
புதிரான
புதுப் பயணம்.
தனிமை
ரசனைக்குள்
நல்லவர்
நினைப்பு
பெருமைக்குள்.,
இனிமை.
ஆனலும் இன்று
தனிமை
என் வெறுப்புக்குள்.
தேவைப்
படும் பொருளாய்
இல்லாமல்
வேண்டப் படும்
இதயத்தை தேடுகின்றேன்.
மாயைகள்
மொய்த்திட வேண்டியவர்
வேண்டா பொருளாகின்றார்..
உலகம்
உருண்டை
கலகம் விரும்பும்
மையம்.
உறவுகள் போலி
உண்மை
நேசங்கள் காலி.
நடிப்பவர்க்கே
நாடு…
தூய அன்புக்கு
இடமேது?

ஆக்கம் கவிஞர் தயாநிதி பிரான்ஸ்