கவிதை !கவிதை ஜெசுதா யோ

கற்பனையோடு களமிறங்கி
இயற்கையோடு ஒன்றாகி
உணர்வுகளை பத்தாடி..

இடர்களையும் இன்னல்களையும்
இடைநிறுத்தி
இன்பங்களைப் பகிர்ந்து
துன்பங்களை தீர்த்து..

அன்பைப் பரிமாறி
பாசத்தை பங்குகொண்டு
சமூகத்தை சீராக்கி
குறைகளையும் நிறைகளையும்
சீர்தூக்கி..

எழும் எண்ணங்களை வடிவமைத்து
எழுதும் வரிகளில்
இடறிவிழும் உள்ளங்களை
விலக்கியும் தாங்கியும்
அணைபோட்டு வாழும் இந்த வாழ்வில்..

அன்பும் ஆதரவும்
அதிகம் எழுத வைக்கிறது
சில ஏமாற்றங்ள் எழுதும்
எண்ணத்தைச் சிதைக்கிறது

எங்களை எங்களுக்கே
பிடிக்காது போகிறது
நேசிப்புக்கள் எல்லாம்
சுயநலங்களே..

தன்னலம் மறந்து பிறர்நலம்
என்பது ஏட்டில் மட்டுமே
என்னை மட்டுமே நேசித்து
வாழும் ஒரு நிலைக்கு
தள்ளப்படுவது வேதனையே

ஆக்கம் ஜெசுதா யோ