காக்கா பிடிப்பான் காரியத்தில் கண்ணாயிருப்பான்

வாய்கிழிய பேசி சில மேடையிலே..
வாக்குகளை கேட்பான் பல ஜாடையிலே..
நோய் பிடித்து அலையும் இந்த அரசியல் வாதிகளே..
நோட்டுகளை காட்டி மாற்றிடுவான் நம் வாக்குகளே..

பொய்யாக புன்னகைத்து உனை அழைப்பான்
போலியான கை கொண்டு உன்னை அணைப்பான்
செய்யாத பணிகளையெல்லாம் பெரிதாக உரைப்பான்
செய் நன்றி இல்லாது அப்போதே அதை மறப்பான்

நாய் போல வாலாட்டி நம் முன்னால….
நரியாட்டம் செயல் படுவான் தன்னால..
நாளை அரியணை ஏறிய பின்னால..
நாம் காண்பது அரிது அவனை கண்ணால…

பாய் போடா தரையிலும் வந்தமர்வான்
பாசாங்கு காட்டி கண்ணீரும் சிந்திடுவான்
பழைய புராணத்தை நம் முன் பாடிடுவான்
பாராளமன்றம் சென்றதுமே மாறிடிடுவான்

நயவஞ்சகனுக்கு என்றும் நாய்கள் குணம்
நல்லவனைத் தேர்ந்தெடுத்தால் நன்மை வரும்
நன்றியுள்ள ஒருவனை நாம் தேடிடணும்
நாம் ஒன்றிணைந்து வாக்களிக்க தேறிடணும்

கவித்தென்றல் ஏரூர்