காலம்…


என்
நண்பணே…
உன்
நிலையில்
மாற்றமென்ன.
என்
நிலை என்றும்
உன் நினைவில்…
இது
கவிதையல்ல
வெளிப்பாடு…
உடன்
பாடு முரண் பட்ட
உடன்படிக்கை…
நேரமின்மையால்
இடைவெளி
நீளமானதாம்…
பழகும்
போது பரவசம்
என வசமாக்கினாய்…
இன்றோ
ஈச்சை மரக்
காட்டின் நிலமாக்கினாய்…
தாகமென
தேடியலைய விரக
தாபமும் எனக்கில்லை.
என் மனதில்
உன் முகம்
ஆவணமானது..
அருவருப்பானதின்று.
யார்
வசமமோ
உன் விருப்பில்
நீ சென்றிடலாம்..
உன்
நினைவுகள்
வடு்க்களாய்
என்னுள்..
விட்டுப்
போனது காதல்.
இது
உனக்கானது
மட்டுமல்ல..
உரத்து
சொல்வேன்
என்னிலை
நிறை குடம்.

தயாநிதி