கையூட்டு 

நீதியும் நியாயமும்
அடங்கி ஒடுங்கி இங்கே
அநீதியும் அநியாயமும்
அகோர தாண்டவம் ஆடிடுதே !

குற்றம் இழைத்து விட்டு
குதூகலம் போடுகிறான் ஒருவன் ;
பணத்தை இறைத்துவிட்டு
பலதும் பத்தும் செய்கிறான் மற்றொருவன் !

வாழ வழியின்றித் தவிக்கிறான்
ஏழை எளியவன் இங்கே – ஏனோ
பணம் படைத்தவனின் தந்திரத்தால்
வீண் பழியும் ஏற்கின்றான் உத்தமன் !

கல்விச் சாலை முதல்
காவல் நிலையம் ஈறாக – நித்தம்
ஆலய வாயில் தொடங்கி
நீதி மன்ற வளாகம் வரை கையூட்டு …

போலிகளாலும் பொய்யர்களாலும்
சூழ்ந்து விட்ட வையகத்தில்
பார்க்கும் இடமெல்லாம் குறுக்குவழி
அதிகாரத்தின் ஆட்சியிலும் – ஐயகோ !!!

– வேலணையூர் ரஜிந்தன்