கொறிக்க….சில பருப்புகள்..

பிறந்தோம்..இறந்தோம் என்பது வாழ்க்கையாகாது..
நாம் வாழ்ந்தோம் என்பதற்கு அடையாளம்
மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதுதான்…
வார்த்தைகளை வடிகட்டி வழங்குங்கள் .

வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்…

ஒரு பறவை,ஒரு தேனியை பார்த்து கேட்டது..
„தேனியே! நீ எவ்வளவோ கஷ்டப்பட்டு
எங்கெல்லாமோ அலைந்து தேனை எடுத்துவந்து
உன் தேன்கூட்டில் வைக்கிறாய், ஆனால் மனிதர்கள்,
அதை இலகுவாக எடுத்துக்கொள்கிறார்களே“ என்று.
அதற்கு தேனீ பதில் சொன்னது..
„அவர்கள் என் தேனைமட்டுமே எடுக்கமுடியும்

என் உழைப்பை எடுக்கமுடியாது“ என்று சொல்லிச்சாம்.

கண்ணகியின் கோபம் மதுரையை எரித்தது..
பாஞ்சாலியின் கோபம் கௌரவர்களை அழித்தது
சூர்ப்பனகையின் கோபம் அவள் அண்ணன் இராவணனை கொன்றது.
அதேபோல்.. பலபெண்களின் கோபம்

உடன்பிறப்புகளையே பிரித்தது..

இளமை ஒரு நல்ல நிலத்தைப் போன்றது.அதில்
முதுமை என்ற மழை கண்டிப்பாக பெய்யவேண்டும்.
அப்போதான் அதில் நல்ல விளைச்சல் கிடைக்கும்..
முதுமையென்ற மழையை பெற்றுக்கொள்ளாத
இளமை நிலத்தில் வரட்சிதான் இருக்கும்…
இளையோர்களே இதை அறிந்துகொள்ளுங்கள்..

கோவிலுர் செல்வராஐன்