சலிப்பு

அடிக்கடி பாடம் புகட்டி
ஆறறிவு மனிதருக்கு
ஏசி ஒரு கவியெழுதி
என்ன செய்யப் போகிறாய் என்றார்கள்
நேற்றைய சுமைகளை நினைத்து
இன்றைய கனவை தொலைத்து விட்டு
என்ன செய்யப் போகிறாய்
என்கிறார்கள்
அநியாயங்களையும் அட்டூழியங்களையும் தொட்டு எழுதிவிட்டால்
கோஷமிட்டுக் கருத்தை கொட்டி
என்ன செய்யப் போகிறாய் என்கிறார்கள்
பூக்களைப் பற்றி ஒரு பாட்டெழுதி விட்டால்
இயற்கையில் லயித்து என்ன செய்யப் போகிறாய் என்கிறார்கள்
சமரசம் செய்து வாழ்ந்து சலிப்படைய விரும்பா மனதிற்கு இன்னும் ஆசையிருக்கிறது மாசற்று மனிதர்களோடு பேசவேண்டுமென!
சுபாரஞ்சன்