***சிரித்த முகம் வேண்டும் ****

சிறு பிராயத்தை பற்றி

சிலவேளைகளில்

சிந்தித்துப் பார்க்கையிலே

சிந்தையில் எப்போதும்

சில கேள்விகள் எழுவதுண்டு .

சிலவழிக்கப் பணமில்லை ,

சீரில்லா நாட்டு நிலைமை ,

சின்ன வயதாக இருந்தாலும்,

சிரமமான வாழ்வுநிலை இப்படி ,

சிக்கல்கள் எத்தனையோ இருந்தாலும் ,

சிரித்த முகத்துடனும்,

சிநேகித குழாமுடனும்,

சிந்தனைகள் எதுவுமின்றி ,

சிறப்பாகவே அமைந்தது .அந்த

சின்னஞ்சிறு பராயங்கள்.

சித்திரைக்கு மட்டும் புத்தாடை ,

சிலவேளைகளில் பிறந்தநாளுக்கும்.

சில ஆடைகளே உடுப்புப்பெட்டிக்குள்,

சிரிப்புமகிழ்ச்சி குறைவின்றி முகத்தில்,

சினமில்லா மனமென்றும் நெஞ்சுக்குள்.

சித்தப்பா பெரியப்பாவோடும் ,

சிநேகிதம் அயலவரோடும் ,

சிற்சில முகமுறிவுகள் நடந்தாலும் ,

சிலநாளிலேயே அது மறைந்து

சீர்பட்டு விடுமே அந்த ,

சிலோன் வாழ்க்கையில்.

சில்லறைகளுக்கெல்லாம்

சிலநாளில் கிடைத்த பணமின்று

சிறகுகளாய் அமைந்து போனது.

சிரித்த முகமும் போனது .

சீ… என்று போகிறது இந்த

சீலம்பாய் வெளிநாடு ,

சிரித்தால் மற்றவர் பதிலுக்கு

சிரிப்பினமோ என்று

சிந்திச்சபடியே இங்கே

சீவிப்பதும் ஒரு வாழ்க்கையோ ?.

..

சிரிப்பு நேசன்