சுவிஸ் தமிழ் பெண்ணின் பிரியா ரகு உலக அளவில் பிரபலமாக ஒலிக்கும் ‚பொப்‘ குரல்

வாழ்த்துகள், வாழ்த்துகள் உலக அளவில் பிரபலமாக ஒலிக்கும் சுவிஸ் தமிழ் பெண்ணின் ‚பொப்‘ குரல்ஈழத்தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட சுவிஸ் பெண்ணான பிரியா ரகு உலகளாவிய ரீதியில் அறியப்படும் பிரபல பாடகியாக மாறுகிறார்.சூரிச்சை தளமாகக் கொண்ட 34 வயதான பிரியா ரகு அமெரிக்காவின் பொப் உட்பட மேற்கு இசையில் பாடல் அல்பங்கள் சிலவற்றைத் தனது சுயமுயற்சியால் தயாரித்து வெளியிட்டு சுவிற்சர்லாந்து இசைப் பரப்பைத் தன்பால் ஈர்த்திருந்தவர். இறுதியாக அவர் வெளியிட்ட „Good Love 2.0“ அல்பம் அவரை உலகளாவிய இசை அரங்கிற்குக் கொண்டு சென்றிருக்கிறது.அண்மையில் பிபிசியில் வெளியிடப்பட்ட „Good Love 2.0“ அமெரிக்க ஊடகமான நியூயோர்க் ரைம்ஸின் இசை விமர்சகர்களது „விருப்பத்துக்குரியது“ என்ற கவனத்தை ஈர்த்ததன் ஊடாக பிரபல சர்வதேச இசைக் கம்பனிகளின் வாய்ப்புகள் அவரை எட்டியுள்ளன.உலக அளவில் மிகப்பெரும் இசைப்பதிவு வெளியீட்டு பல் தேசியக் கம்பனியான „வார்னர் மியூசிக்“ (Warner Music) பிரியா ரகுவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளது என்ற செய்தி இந்த வாரம் வெளியாகி உள்ளது. உலகப் புகழ் பெற்ற உதைபந்தாட்ட தொடர் FIFA வீடியோ கேம் (football video game FIFA) அதன் 2021 பதிப்புக்கான தொடக்க இசையாக பல நட்சத்திரப் பாடகர்களுடன் பிரியா ரகுவின் குரலையும் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் உலகெங்கும் பல மில்லியன் இல்லங்களில் அவரது குரல் ஒலிக்க உள்ளது.இவ்வாறு உலக அளவில் அறியப்படும் முதல் சுவிஸ் பெணாக மாறும் பாடகி பிரியா ரகு பற்றிய செய்திகளை சுவிஸ் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்கின்றன.ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட பிரியா ரகுவின் பெற்றோர் 1981 இல் சுவிற்சர்லாந்தில் குடியேறி உள்ளனர். சுவிஸில் சென்காளன் (St.Gallen)என்ற பகுதியில் பிறந்து வளர்ந்த பிரியா ரகு தற்போது விமானப் பொறியியல் தொழில்நுட்பவியலாளராகப் பணி புரிகிறார். சிறுவயது முதல் தனது சகோதரனுடன் சேர்ந்து பல பாடல்களை சுயமாக எழுதி, இசையமைத்துப் பாடி இன்று இசை உலகில் அவர் பெரும் உச்ச வளர்ச்சியை எட்டியுள்ளார் என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.நன்றி, குமாரதாஸன் , யாழவன் ராஐன்…