செயல் வேந்தர் ஆசிரியர். கி.செ.துரை

இவர்
எண்ணம்
எழுத்து
செயல்
மூன்றும்
சேர்ந்த கலவை..

சாதனைகளை
எட்டுவதே என்றும்
இவரது முனைப்பு.
புலம் பெயர் நாட்டில்
முதல் ஈழத்து
பெண் விமானிக்கும்
இசை.கமெரா.எடிற்றின்
நடிப்பு என
முப்பரிமானம்
கொண்ட கலைஞன்
வசந்தின் தந்தை…

சிந்தை நிறைய
ஈழத்துச் சினிமாக்கு
ஓர் சந்தை வேண்டும்
எனும் துடிப்பும் செயலும்
இளம் புயல்.உயிர்வரை
இனித்தாய் எனும்
முழு நீளப் படங்களின்
இயக்குனராவார்.

ஈழத்து திரை அரங்குகளை
மக்கள் வெள்ளத்தால் நிறைத்து
திரையிட்ட பெரு மனிதர்
சிறந்த பேச்சாளன்
ஐபிசி தமிழில்
உலக வலம் நிகழ்வினை
செய்தியாக டென்மார்க்கில்
இருந்து தயாரித்து
வழங்கும் வல்வர்
இவர்களின் நட்பு
எங்களுக்கு பெரும் பலம்
சாதனைகள் தொடர
வாழ்த்துவோம் வாருங்கள்..

     ஆக்கம் கவிஞர்தயாநிதி