ஜேர்மனி டோட்முண்டில் தமிழர் வரலாறு „நூல் வெளியீடு

ஜேர்மனி டோட்முண்ட் நகரில் 1979 ஆண்டிலிருந்து குடும்பமாக வாழ்ந்து வருகின்ற திரு.நா.அன்னராசா அவர்களால் எழுதப்பட்ட „ஜேர்மனி டோட்முண்டில் தமிழர் வரலாறு „ என்ற நூல,; 29.05.22 அன்று டோட்முண்ட் தமிழர் அரங்கத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

இந்நூலாசிரியர் 1979 ஆம் ஆண்டிலிருந்து டோட்முண்டில் குடும்பமாக வாழ்ந்து கொண்டே, பொதுவாழ்விலும் தம்மை ஈடுபடுத்தி அதற்கூடான தான் ஆற்றிய தமிழப்பணியினையும் தனது அனுபவத்தையும் இந்நூலில் பகிர்ந்திருக்கிறார்.

மனித வாழ்வு என்பது அன்றாட வாழ்க்கையிலிருந்தே ஆரம்பிக்கிறது.தனமனிதன் குழுநிலையடைந்து சமூகமாகவும் பின்னர் இனத்தின் தொகுப்பாகவும் தன்னை இணைத்துக் கொள்கிறான்.மன்னர் காலத்து சரித்திரத்திலிருந்து இன்றுவரைiயான வரலாறுகள் அதனையே சுட்டிநிற்கின்றன.

ஒவ்வொரு தனிமனிதனின் உணவுப்பழக்கவழக்கங்கள், ஆடையணிகள், ஆன்மீக வெளிப்பாடுகள்,கல்வி,கலாச்சாரம்,கலை என இன்னோரன்ன எல்லா அலகுகளும் இணையம் போது தனிமனித வரலாற்றை உள்ளடக்கி அது ஒரு சமூகத்தின் வரலாறுகிறது.

இதனடிப்படையில் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழரில் ஒரு கணிசமான தொகையினர் டோட்முண்ட நகரில் குடியேறி வாழ்ந்து கொணடிருக்கும் வாழ்க்கையில் அவர்களால் மேற்கொண்ட சமூகநலன் நோக்கிய செயல்பாடுகளை தனது பல கோணங்களில் நின்று தனது பார்வையாக இந்நூலாசிரியர் எழுதியிருக்கின்றார்.

இவ்விழாவினை திருமதி.விஜயசுகந்தினி கோணேஸ்வரன், திருமதி.லைலா முருகதாசன்,திருமதி.மல்லிகாராணி வாசுதேவன்,திருமதி.கிருஸ்ணராணி பதியமரன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க தாயக மண்மீட்புப் போரில் தமது இன்னுயிர்களை நீத்த போராளிகளுக்கும்,பொதுமக்களுக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து இவ்விழாவில் பங்குபற்றியோர், சபையோர் என அனைவரையும் வரவேற்று திருமதி.ஜனனி நவநீதன் வரவேற்புரை வழங்கினார்.இவ்விழாவிற்கு கவிஞையும் எழுத்தாளரும்,தமிழாசிரியையுமாகிய திருமதி.நகுலா சிவநாதன் தலைமை தாங்கிச் சிறப்பித்தார்.

தொடர் நிகழ்வுகளாக பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்தாளரும், நாடக,குறும்பட நடிகருமான ஏலையா க.முருகதாசன் இந்நூலின் தேவை பற்றிய கருத்துக்களையடக்கி உரை நிகழ்த்திய போது தனித்தனி தனிமனித வரலாற்றின் குழுத்தன்மைதான் சமூகம், இனக் குறிப்பிட்ட அவர்,அதசை; செம்மையாக இந்நூலில் குறிப்பிட்டு இந்நூலாசிரியரைப் பலரும் வியந்து பார்க்க வைத்துவிட்டார் என்றார்.

அதனைத் தொடர்ந்து வாழ்த்துரை வழங்கியவரான,எழுத்தாளரும் கலைவிளக்கின் ஆசிரியராகவிருந்தவருமாகிய திரு.சு.பாக்கியநாதன் இந்நூலாசிரியர் டோட்முண்ட் தமிழ்மக்;களின் பன்முக தேவைநோக்கி தொண்டாற்றி ஆரம்பகர்த்தாவாக இருந்ததை எவராலுமே மறுக்க முடியாது எனத் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டவர் அவரும் தானும் சேர்ந்தியமை என்றுமே பசுமரத்தாணி போல இருக்கும் என்றார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொணடவரும்,விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியும் நெறிப்படுத்தியவருமான இளங்கவிஞையும், எழுத்தாளரும் முன்ஸ்ரர் பல்கலைக்கழக விரிவுரையாளருமான செல்வி.சறீகா சிவநாதன்,இநு;நூல்பற்றி தனது நுட்பமான பார்வையை பலரும் கவனித்திருக்காத பல ஒப்பீடுகளுடன்: குறிப்பிட்டது மட்டுமல்ல, அவ்வப்போது சிறப்பான கருத்துக்களைக் கூறியிருந்தமையை சபையோர் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர்.இளந்தலைமுறையினரின் சிந்தனை நுட்பமானது என்பதைக் காணக்கூடியதாகவிருந்தது.

வாழ்த்துரை நிகழ்த்திய எழுத்தாளரும்,பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவருமாகிய திரு.விமலசேகரன் சபேன், இந்நூலாசிரியர் பற்றி தனதுரையில் குறிப்பிடுகையில், இந்நூலாசிரியரின் உழைப்பு இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கின்றது.அவரும் இந்நகரின் நகர நிர்வாகத்தினருக்கு டோட்:முண்ட் தமிழர்களைப் பற்றிய சிறப்பான வலுவான கருத்தை பதிய வைத்ததன் மூலம், அவர்கள் அமைத்த பாதையில் நாம் நடந்து செல்கிறோம்,தெருவிழா நடத்துவதற்கும் அதுவும் காரணமாக அமைந்துள்ளது எனவும் சுட்டிக் காட்டினார்.

அதனைத் தொடர்ந்து நூலை வெளியிட்டுவைத்து நூலை விமர்சனம் செய்த ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையினதும், திருவள்ளுவர் பாடசாலையின் பொறுப்பாளரும் ஆசிரியருமாகிய திரு.பொ.சிறீஜீவகன் இன்று கல்விசார் செயல்பாடாகட்டும்,ஆன்மீகம் சார் கோவிலாகட்டும்,கலைசார் செயல்பாடாகட்டும் அவற்றக்கெல்லாம் அத்திவாரம் இடப்பட்டவர்களில் இந்நூலாசிரியரும் மிக முக்கியமானவர் எனக் குறிப்பிட்டார்.

விழாவிற்கு தலைமைதாங்கி தலைமையுரை நிகழ்த்திய திருமதி.நகுலா சிவநாதன்,தமிழ் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டமைக்கு இந்நூலாசிரியரே முதற் காரணமென்றும், தமிழ்க் கல்வியின் முக்கியம் பற்றி பலரையும் ஊக்குவித்து எண்ணப் படிமங்களை ஏற்படுத்தி,தமிழ் மொழிக் கல்வியின் சிந்தனையை ஏற்படுத்தி இன்று டோட்முண்ட் நகரில் தமிழ்மொழி வகுப்புகள் செழித்தோங்கி நிற்பதற்கு திரு.நா.அன்னராசா அவர்கள் காரணகர்த்தா என்பதை யாராலுமே மறுக்கவோ மறைக்கவோ இயலாது எனக் குறிப்பி;டார்.நூலாசிரியர் அவர்களுக்கு திரு.திருமதி.கணேஸ் குடும்பத்தினர் வாழ்த்து மடல் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன்,திரு.பொ.சிறீஜீவகனாலும்,திருமதி.நகுலா சிவநாதன்,திரு.திருமதி.விஜயசுதன் துசானி ஆகியோரால் நூலாசிரியருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.

ஏற்புரையை நூலாசிரியர் வழங்கியதுடன்,இவ்விழாவினை சிறப்பாக நடத்தி நிறைவு செய்வதற்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் ஒத்தழைப்பு வழங்கிய அனைவருக்கும் திருமதி.கம்சாயினி ஜனன் நன்றி செலுத்தி நன்றியுரை வழங்கினார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert