டிலக்சன் யெயரட்டணம் „எகிப்தின் இளவரசன்“ என்ற ஆங்கில டெனிசு மொழி இசை நாடகத்தில் நடித்து வருறார்.

டென்மார்க்கில் வாழும் டிலக்சன் யெயரட்டணம் என்ற ஈழத்தமிழ் இளைஞர் „எகிப்தின் இளவரசன்“ என்ற ஆங்கில டெனிசு மொழி இசை நாடகத்தில் நடித்து வருவதாக அதில் கூறியிருந்தார்.

அமெரிக்காவிலும் டென்மார்க்கிலும் மேடையேற்றப்பட்டு வருகின்ற இந்நாடகத்தை பார்ப்பதற்காக தொடர்ந்தும் அதிகவிலை கொடுத்து நுழைவிதழ்ச் சீட்டினை மக்கள் வாங்கி மண்டபத்தை நிறைத்து வருவதாக பெருமையுடன் அவர் தெரிவத்திருந்தார்.

நானும் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.ஈழத்தமிழர்கள் இன்னும் மருத்துவம் பொறியியலாளர் கணக்காளர் என்ற வட்டத்தையே பெருமைமிகு கல்வியாக சுற்றிச் சுழன்று வருவது கண்கூடாக பார்க்கும் உண்மையாகும்.

கற்றுக் கொள்வதற்கு பரந்தவெளி போல பலதுறைகள் உண்டு என்பதை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும் .எதிலும் பணம் சம்பாதிக்கலாம் மிளிரலாம் என்பதற்கு டிலக்சன் பெரும் சான்று அவரை வாழ்த்தி மகிழ்வோம்.