தனிமையிலே வாட்டுகிறாள் கன்னி !கவிதை கவித்தென்றல் ஏரூர்

தடாகம் விட்டு தாவியதோ தாமரையொன்று
தரையை விட்டு மேவுகிறது விழிகள் ஏதோ கண்டு
தடம் மாறிப் போனதே பாதையின்று
தவித்து நின்று

கன்னி உன்னைக் கண்டதுமே காதல் எழ
காந்த உடல் கண்களிலே காயம் தர
கந்தகத்தை வீசி விட்டாள் நெஞ்சில் விழ
கைகளிலே சிக்கிவிடா இவள் மாயப் பிறை

முக்கனியை தோற்கடிக்கும் செங்கனியோ
முற்பகலில் விழைந்திருக்கும் வெண்பனியோ
முத்துரதம் ஒளிந்திருக்கும் கண்மணியோ
முக்குளித்தால் உன் மனது நிம்மதியோ

கெண்டை வரைக் கண்டதிலே ஒரு கிறக்கம்
கொண்டையிலே பூ முடிக்க நான் மயக்கம்
கண்டதெல்லாம் கண்களிலே பதிவிறக்கம்
கட்டையிலே போன பின்னே அது இறக்கும்

தித்திக்கும் தேகமது செவ்வாழை
தீப்பிடித்து எரிகிறது என் மனம் உள்ளார
திறந்த விழி மூடவில்லை பெண்பாவை
தே________க்க திறந்திடு உன்னாடை..!!

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்