தனி தமிழ் இசையே. கவிதை தே.பிரியன்

யாழிசைத்து பாட்டெடுத்த நம்ம தமிழ் ஊரடா
ஏழிசையை உருவாக்கி ஏறி வந்தோம் பாரடா
பாட்டும் கூத்தும் ஏத்தும் நம் சிறப்பட
பண்பாடு பேசியே பறைகொட்டி ஆடடா
கானகத்தில் உருவெடுத்த தேனிசை தானடா
காலம் நம்மை வாழ்த்துரதே கைதட்டி ஆடடா

திரைகடல் ஓடி திரவியம் தேடுவோம்
அலைகடல் மீதினில் அசைந்து நாம் பாடுவோம்
ஒளிதரும் ஆதவன் உதித்திடும்முன்னே
நாட்டியம் ஆடுவாள் நம்தமிழ் பெண்ணே
மழைகளின் இரைச்சல் வாங்கியே அவளும்
மனம் கொண்டு ஆடிடும் தனி தமிழ் அழகே
குயில்களின் இசையும் தமிழ் கொண்டு சேரும்
குழந்தையின் முகத்தில் இசை கொண்டு ஆடும்

ஆக்கம் தே.பிரியன்