தனுவின் வரிகளில் மிக விரைவில் வெளிவருகிறது பஜாரிப்பெட்டை……….

தனுவின் வரிகளில் மிக விரைவில் வெளிவருகிறது பஜாரிப்பெட்டை……….
தமிழன் 24 இன் தயாரிப்பில் உங்களை நோக்கி “ பஜாரி பெட்டை “ தமிழர்களால் தமிழனின் வளர்ச்சிக்கு என்றும் துணைநிற்கும் தமிழன் 24 இன்னும் சிறந்த பல சினிமாவை ஈழத்து சினிமாவுக்கு வழங்குவதக்கு நாம் தமிழன் 24இற்கு துணை நிற்போம்.

ஈழத்து சினிமாவில் தமக்கென ஒரு பாணியை அமைத்து பல சாதனைகளை நிலைநாட்டிட வேண்டுமென்ற துடிப்பில் வளர்ந்துவரும் கலைஞர்கள் பலரின் உழைப்பில் வெளிவரும் புத்தம் புதிய காணொளிப்பாடல் „பஜாரிப்பெட்டை“ இந்தப்பாடலுக்கான இசை மற்றும் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட ஒளித்தொகுப்பு வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றது…சிங்காரி பாடலை தொடர்ந்து பல பாடல்களையும் குறும்படங்களையும் கொடுத்த ஈழத்து கலைஞர்கள் கே.ஜே , ஈழத்து நடிகை மிதுனா, குகனி டீகே, சசிகரன் யோ, அரவிந்தன், சிந்து,சித்தார, துவா மற்றும் பலரின் நடிப்பில், இந்த பாடலை எழுதி உள்ளார் இத்தாலியில் இருந்து தனுக்குட்டி இவர் பல வெற்றி பாடல்களை எழுதி தனக்கென்ற பெயரை நிலைநாட்டிய கலைஞன், இந்த பாடலின் ஒளித்தொகுப்பினை ஈழத்தில் இருந்து வரும் முழுநீளத் திரைப்படங்கள் மற்றும் பாடல்களில் ஒளித்தொகுப்பு செய்த சசிகரன் யோ செய்கிறார்.

இந்த பாடலின் இசை மற்றும் பாடலை பாடி உள்ளார் மொகமட் சமில் ஜி. மொகமட் ஷமில் ஜீ ஈழத்து திரைத்துறையில் பல பாடல்களுக்கு இசையமைத்து பல விருதுகளையும் வாங்கிய ஒரு இசையமைப்பாளர் என்பது சிறப்பம்சம்.

இவரை தவிர மிதுனா ஈழத்து சினிமாவில் பெயர்சொல்லக்கூடிய சிறந்த நடிகையாக இருப்பதும் அவர் இந்த பாடலில் நடித்து இருப்பதும் சிறப்பு.ஒவ்வொரு கலைஞர்களும் தமது திறமையை நிரூபிக்க போட்டிபோட்டு இந்த பாடலை முழுமைப்படுத்தி இருக்கின்றார்கள். ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியம் படத்தொகுப்பு சசிகரன் யோ இசை, பாடியவர் மொஹமட் சமில் ஜீ வரிகள் தனு தனுசன் கதை, திரைக்கதை மிதுனா அன்பு ரசிகர்களே உங்களுக்காக பஜாரிப்பெட்டை மிக விரைவில்

Merken