தமிழுக்கு பாமாலை!கவிதை ஜெசுதா யோ

செம்மொழி தித்திக்கும்
என் தமிழ் மொழி
தெவிட்டாத தேன் மொழி
நாவினில் சுவைத்திடும்
அற்புதமொழி தமிழே..

தாய் போலவே
என் தாய்மொழியும்
உயிரோடு உடலோடும்
ஒன்றாகி வாழும்
எம் மொழி தமிழ் என்றால்
இன்பம் பொங்குதே
இதயம் எங்கும் …

தேசங்கள் பல கடந்து
நாங்கள் வாழ்ந்தாலும்
எத்தனை மொழிகளை
நாம் பேசினாலும்
முகவரி தந்த மொழி
முத்தாக மிளிரும் மொழி
தமிழ் எங்கள் உயிர் மொழி

அள்ள அள்ள குறையாத
ஆழ்கடல் போலவே
எத்தனை அழகு சொற்கள்
என் தமிழுக்குள் இருப்பது
கண்டு உள்ளம் பூரிக்கிறதே

தமிழுக்கு அமுதென்று பெயர்
அமுதென்றால் இனிப்பென்று பொருள்கள்
தேனான என் மொழியை
சுவைத்திட கசந்திடுமோ
என் உயிர் உள்ளாவரை

எத்தனை உயர்ந்த
புலவர்கள் புனைந்தனர் தமிழை…
அத்தனை உயர்வான என்
உயிர் தமிழ் மொழிக்கு
பாமாலை புனையைக்
வார்த்தைகள் ஆயிரம்
உண்டு ..வடித்தேன்

புதிய பற்பல சொற்கொண்டு
புனைந்தேன் நானும்
ஒரு புதுக்கவிதை ஒன்று
தமிழுக்கு பாமாலை சூட்டிட
வாழ்க தமிழ் வளர்க தமிழ்

ஆக்கம் ஜெசுதா யோ