தமிழ் நாட்டில் நடைபெற்ற நந்தவனம் விழாவில் சர்வதேச அளவில் இருபது பெண்கள் தெரிவு செய்யப்பட்டனர்

அண்மையில் தமிழ் நாட்டில் நடைபெற்ற நந்தவனம்
S விழாவில் சர்வதேச அளவில் இருபது பெண்கள் தெரிவு செய்யப்பட்டனர் . அதில்
Svr Pamini ஒருத்தியாக தெரிவுசெய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சியே

. அதுமட்டுமன்றி சுவிஸ்லாந்தில் இன்னொரு சாதனைப் பெண்ணும் தெரிவு செய்யப்பட்டார். பாசல் செந்தமிழ்ச் சோலையின் ஆசிரியரும், அன்பும் ,பண்பும் எல்லோருக்கும் உதவி செய்யும் மனம் நிறைந்தவருமான திருமதி தர்மராஜா பத்மா அவர்கள் .

என்னால் தவிர்க்க முடியாத காரணத்தால் இந்தியா செல்லமுடியவில்லை பத்மா ஆசிரியரிடம் என் விருதையும் நிகழ்வில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன் அவரும் அன்புடன் சரியென்று கூறினார் .

நேற்று முன் தினம் இந்தியாவில் இருந்து விருதை பெற்றுக் கொண்டு வந்த ஆசிரியருக்கு வாழ்த்தை சொல்லிவிட்டு என் விருதையும் 
பெற்றுக்கொண்டு வருவோம்
என்று சென்றேன். அங்கே சென்றால் நிறையப்பேர் நின்றார்கள் என்ன நடக்குது என்று தயங்கி தயங்கி கையில் ஆசிரியருக்கு கொடுப்பதற்க்காக மலர்க்கொத்தோடு சென்றேன் . முகம் தெரியா பல உறவுகள் என்னை அன்போடு வரவேற்றார்கள் . அதன்பிறகுதான் தெரியும் பத்மா ஆசிரியருக்கும் தெரியாமல் பாசல் செந்தமிழ்ச்சோலை ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் மக்கள் என பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களது அன்பிலும் வாழ்த்துக்களிலும் நனைந்துவிட்டேன் . அத்தோடு நந்தவனம் விருதை பத்மா ஆசிரியரின் கையால் பெற்றுக்கொண்டது கூடுதல் மகிழ்சியே .
அன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத அழகிய நாள் .இவ் உறவுகளை எல்லாம் ஏற்ப்படுத்தி தந்த நந்தவனம் சந்திரசேகரன் அண்ணாவுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்?மற்றும் ஆசிரியை பவானி அக்கா,காயத்திரி ரவல்ஸ் ரவி அண்ணா ,ஆசிரியை மேரி அக்கா , மதிப்புக்குரிய ஜயா செல்வஜோகநாதன் வேலுப்பிள்ளை , செந்தமிழ்ச்சோலை தர்மராஜா அண்ணா,
பாசல் செந்தமிழ்ச்சோலை நிர்வாகிகள் ஆசிரியர்கள்,மாணவர்கள் ,பெற்றோர்கள்,மற்றும் பெயர்கள் தெரியாமல் தவறவிடப்பட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த
Svr Pamini நன்றிகள்??