தயாரிப்பாளர இயக்குனர் சுதாகரன் தன்னைப்பற்றிபகிர்ந்துகொள்கின்றாரர்

கனடா வந்து வாழ ஆரம்பித்துஇ 30 வருடங்கள் நிறைவடைகின்றன. இங்கு வந்திருக்காவிட்டால் எங்கு எப்பிடி இருந்திருப்பேனோ நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. என்னை இங்கு வரவழைத்த என் மாமாவுக்கும் அனுப்பிவைத்த என் தந்தைக்கும் மிக்க நன்றி.

இந்த வருடத்தோடு 20 வருடங்கள் நிறைவடைகின்றன என் ஊடகப்பயணத்தில். இந்த வருடங்களில் எத்தனையோ அனுபவங்கள்இ சோதனைகள் இ வேதனைகள்இஅவமானங்கள் எல்லாவற்றையும் கடந்து ஒரு புலம்பெயர் தேசத்தில் பிடித்த துறையில் பணியாற்றுவது என்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம். இந்த 20 வருடங்களில் 6 வானொலி ஃ தொலைக்காட்சி நிறுவனங்கள் பல குறும்படங்கள் சில திரைப்படங்கள்.

இந்த 2019 ஆண்டு மிகவும் முக்கியமான வருடம். இந்த வருடத்தில் என் தயாரிப்பு இயக்கத்தில் முதல் முறையாக கனடாவிலும் யாழ் மண்ணிலும் படமாக்கப்பட்டு வெளிவந்த „ஒருத்தி“ திரைப்படம் கனடாவையும் கடந்து 9 நாடுகளில் திரையிடப்பட்டு பலராலும் பாராட்டு கிடைத்த வருடம். கனடாவையும் கடந்து என்னை ஏனைய நாடுகளில் அறிமுகப்படுத்திய வருடம். பல நல்ல உள்ளம்கொண்ட நண்பர்கள் கிடைத்த வருடம். அனைவருக்கும் நன்றி.

இந்த பயணத்தில் எனக்கு கிடைத்த நல் ஆசான்கள் பலர். பிழைகளை சுட்டிக்காட்டி தட்டிக்குடுத்து மேலும் வளர ஊக்கம் தந்தவர்கள். அனைவருக்கும் நன்றி.