தாயக பெண் படைப்பாளி ஈழவாணியின் சிறப்புக்கள்!

பூவரசி மீடியா,பூவரசி பதிப்பகம், பூவரசி அறக்-கட்டளை போன்ற நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்,தாயக பெண் படைப்பாளி ஈழவாணி அவர்களுடன் நாங்கள். இனி ஈழவாணியின் சிறப்புக்கள் .. ஈழவாணி ஈழத்தில் வவுனியாவில்
பிறந்தவர்.ஆரம்பக்கல்வியை வவுனியா ரம்பைக்குளம் தேசிய மகளிர் கல்லூரியிலும்,
உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகத்தி-லும்,அழகப்பா பல்கலைக்கழகத்திலும் எம்.ஏ.
ஊடகக்கல்வி பயின்றவர்.

திரைப்படைப்பாளி இயக்குநர் பாலுமகேந்திராவின் திரைப்படக்கல்லூரியில் இயக்குநர் பயிற்சி பெற்றவர்.பல ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் விளம்பர படங்களையும் தயாரித்து இயக்கியிருக்கிறார். அம்மா உட்பட சில இசைப்பாடல் அல்பங்களையும் தயாரித்திருக்கிறார்.
பூவரசி மீடியா,பூவரசி பதிப்பகம், பூவரசி அறக்கட்டளை போன்ற நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராகத் தற்போது இருக்கிறார்.

சிறுவயது முதலே கலை,இலக்கியப் படைப்பா-க்கங்கள் மீது ஆர்வங்கொண்டு செயற்பட்டுவருபவர்.தற்போது கவிஞராக,எழுத்தாளராக, நாவலாசிரியராக, பேச்சாளராக எனப் பன்முக ஆளுமையாளராகத்
திகழ்கிறார்.

அத்தோடு பூவரசி அறக்கட்டளையின் ஊடாக பல சமூக சேவைத்திட்டங்களையும் ஆற்றிவருகிறார். குறிப்பாக பாதிக்கப்பட்ட சிறுவர் பெண்களுக்கான உளவள சேவை,
ஆதரவற்ற கைவிடப்பட்ட பெண்களுக்கான வேலைவாய்ப்பு உதவித்திட்டங்களைப் பெற்றுக் கொடுத்தல்,நலிந்த படைப்பாளர்களுக்கு ஊக்குவிப்பளித்து,புதியவாய்ப்புகளைப் பெற்றுத்தருதல் போன்ற செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் போன்றவற்றிலும் ஈடுபடு-கிறார்.
இவருடைய நூல்கள்
இலங்கை பெண் படைப்பாளர்களின் சிறுகதைகளை தொகுத்து (இவரது சிறுகதை உள்ளடங்கலாக) „காப்பு „சிறுகதைகள் தொகுப்பு

சிறுகதை நூல்கள்
27,யாழ்தேவி (பூவரசி 2017)
நிர்வாணமுக்தி (மித்ர, 2013)
நிறங்கள் (சூரியன் வெளியீடு, 2004)

கவிதை நூல்கள்
மூக்குத்திப் பூ (பூவரசி 2016)
விலக்கப்பட்ட தாள்கள். (மித்ர -பூவரசி -2014)
ஒரு மழைநாளும் நிசிதாண்டிய ராத்திரியும் (உயிர்மை, 2012)
தலைப்பு இழந்தவை (தகிதா,2009)
சிதறல் (சூரியன் வெளியீடு, 2004)

ஆய்வு நூல் :
நாட்டார் வழக்காற்றியலும் நாட்டுப்புறப்பாடல்களும் (பூவரசி -2017)

ஈழத்து நாட்டார் பாடல்கள் (உயிர்மை,2011)
நெஞ்சோடு கொஞ்சும் நாட்டுப்புறப் பாடல்கள் (சூரியன் வெளியீடு, 2005)

ஆவணப்படங்கள்:
வரலாற்றில் வாழ்கிறார் எஸ்.பொ
தன்னானே : கே.ஏ.குணசேகரன்
பெண்வீச்சு : நா.பாலேஸ்வரி
ஈழநாட்டியம்
புலம்பெயர்ந்த புலம்பல்கள்.

குறும்படங்கள் :
திவலை
அலட்சியம்
அம்மா வருவாள்

பூவரசி பதிப்பகத்தால் இது வரை 224 தாயக மற்றும் புலம்பெயர் படைப்பாளிகளின் நூல்கள் இவரது மேற்பார்வையில் வெளியாகியிருக்கிறது.
இந்த ஆண்டு 2020 தைமாதத்தில் இவரது நாவலான „கொச்சிக்கட VS கும்மிடிபூண்டி „
நாவலும் வெளியாகியுள்ளது.
அந்த நாவலை அவரது கரங்களால் நானும் (கே.பி.லோகதாஸ்) அவரது தொகுப்பான இலங்கைப் பெண் படைப்பாளர்களின் சிறுகதைகள் நூலை அவரது கரங்களால் மூத்த நாடகவியலாளர் ஜே.ஏ.சேகரன் அவர்கள் சென்னை புத்தகக்கண்காட்சியில் பெற்ற போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் இது.
இன்றைய 08.03.20 பெண்கள் தினத்தில் பல்துறை ஆற்றல் நிறைந்த பெண்மணி ஈழவாணி அவர்களின் சிறப்புக்களை பதிவிடுவதிலும் பாராட்டுவதிலும் பாரிஸ் பாலம் படைப்பகத்திடன் இணைந்து நானும் பேரானந்தம் அடைகிறேன் நல்வாழ்த்துக்கள் ஈழவாணி…(K.P.L)