துலைக்கோ போறியள்பற்றி மன்மதன் பகிர்வு!

 

துலைக்கோ போறியள் Crowdfunding update – 3
வணக்கம் , கடந்த மாதம் எனது அடுத் படத்துக்கான அறிவிப்பையும், கடந்த கிழமை அதை Crowdfunding செய்யப் போவதாகவும் அறிவித்திருந்தேன்.
இன்று திட்ட வரைபை சமர்ப்பிக்கிறேன்.
தலைப்பு – ”துலைக்கோ போறியள்” (2013 நான் எடுத்த ஒரு நகைச்சுவைக் குறும்படத்தின் முழு வடிவமாகும் அப்படம் இணையத்தில் உண்டு)
படத்தின் கால அளவு – 160 நிமிடங்கள் (ஏறத்தாழ)
படப்பிடிப்பு நாட்கள் – 35
நடிக்கும் பாத்திரங்கள் எண்ணிக்கை – 46 (பிரதானம்) , 50 (துணைப்பாத்திரங்கள்)
பட்ஜெட் – 4,650,000 LKR (இயக்குனர் சம்பளம் உள்ளடங்காது படத்தில் ஓடி வரும் இலாபத்தில் தான் சம்பளம்)
நான் ஒரு இயக்குனராக பணம் தொடர்பான தலையிடிகளில் இருந்து சற்று தொலைவில் நின்று உருவாக்கத்தை கவனிக்க, ஈழத்து கலைஞர்களுக்காக தோற்றம் பெற்ற படைப்பாளிகள் உலகத்தை சேர்ந்த திரு ஐங்கரன் கதிர்காமநாதனே இத்திட்டத்தை முன்னின்று ஒழுங்கமைக்கிறார்.
பங்கு விபரம்.
தயாரிப்புத் தொகை முழுதாக்கப்பட்டு 50 இலட்சமாக மாற்றப்படுகிறது. ஒரு பங்கு ஒரு இலட்சம் வீதம் 50 பங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
பணக்கையாளுகையில் நான் ஒருவராகவும், 50 பங்குக்கும் பொதுவானவர்களால் நியமிக்கப்படும் ஒருவரும். களத்தில் இயங்கக் கூடிய ஒருவரும் எனச் சேர்த்து 3 பேரின் ஒப்புதலுடனேயே பணம் வங்கியை விட்டு வெளியே வரலாம்.
ஒவ்வொரு நாள் இரவு 10 மணிக்கும் 50 பேருக்கும் அன்றை வரவு செலவுக் கணக்குகள் சமர்ப்பிக்கப்படும்.
இப்படி ஒரு திட்டத்தில் உள்ள இலாபம் என்னவென்ன?
நேரான பக்கம் –
1- இத்திட்டத்தில் வெல்வோமாக இருந்தால் இனி வரும் காலத்தில் ஒருவர் தனது நல்லதொரு முன்னோட்டத்தைக் காட்டியே தனது படத் தயாரிப்பாளரை ஒருங்கிணைத்துக் கொள்ளலாம்.
2- எங்களுக்கு தனிப்பட்ட தயாரிப்பாளர்களே தேவைப்படாத ஒரு காலம் கூட உருவாகலாம்.
மறுபக்கம் –
1- இதுவும் நேரான பக்கம் தான் ஆனால் மறுபக்கமாகும். தனி ஒருவர் 50 இலட்சம் போட்டு தயாரிக்கும் போது 40 இலட்சம் தான் வருவாய் என்றால் தனது இழப்பான 10 இலட்சத்தை ஈடு செய்ய தனியே அவரால் போராட முடியாது.
ஆனால்
50 பங்காளர் எனும் போது ஒருவருக்கு 20 ஆயிரமே நட்டமாக அமையும் ஆனால் அந்த 20 ஆயிரத்தையும் DVD அல்லது தனிப்பட்ட முறையில் கொடுக்கும் நுழைவுச் சீட்டுக்கள் மூலம் ஈடு செய்து கொள்ளலாம் என்ற இரண்டாவது திட்டத்துடனேயே கால் பதிக்கிறேன்.
இத்திட்டத்திலும் என் திரைப்படத்திலும் நம்பிக்கையுடையவர் இணைந்து கொள்ளலாம். இத்திட்டத்தால் நாம் சாதிக்க முடியும் என நினைப்பவர்கள் தங்களால் பங்காளராக இணைய முடியாவிடினும் இந்த தகவலை பகிராமல் ஒத்தியொட்டிக் ( copy paste ) க் கொள்ளுங்கள் மிக முக்கியமாக என் பெயரை நேரடியாக tag செய்ய வேண்டாம். (காரணம் பேஸ்புக் tag post களை காண்பிக்கும் எல்லை மிகச் சுருங்கியது)