தெருப்பாடகன்…..

ஆரவாரமாக அவசரமாக
கடந்து செல்லும்
ஒவ்வொரு காதுகளிலும்
அத்துமீறி நுழைகின்றது இந்தக் குழலிசை

எப்போதும் புகுந்திராத புது
ராகம் ஒன்றை மீட்டுகிறான்
உற்றுக்கேட்ட கணப்பொழுதில்
வாழ்த்தி வழிமொழிந்து
நகர்கின்றேன்

துயரம் தோய்ந்த
இசைத்துணுக்குகளை
சேகரித்து புன்முறுவல் செய்து
காணாமற் போகின்றவர்களை
காசேதும் கேட்டு அழைக்காத
இவன் காலடியில் கலை நிரம்பி வழிகிறது
பாத்திரம் காத்துக் கிடக்கிறது

குளிர்கொண்ட காற்று நடுங்க வைத்தாலும்
மூச்சிழுத்து வெளியேற்றும்
ஒவ்வொரு நொடியும் மூங்கிலிசை வாழ்கிறது
இவனும் வாழ்கிறான்?

சுபாரஞ்சன்