தேவதைகள் காத்திருக்கிறார்கள்.கவிதை வேதா. இலங்காதிலகம். டென்மார்க்

தேவதைகள் காத்திருக்கிறார்கள் புதுமைச் சொல்லிது
தேவ(அ)டியாள்கள் காத்திருக்கிறார்கள் பழைய சொல்லிது.
தேவைகள் மாறாதது அன்றுமின்றும் ஒன்றே.
தேவதாசிகளிங்கு தேவதையானார்கள் இது தேவரகசியமல்ல.
காமக் கிழத்தி, காதற் பரத்தையென்றும்
கணிகையரென்ற பொது மகளிர் ஆனவர்கள்.

குற்றம் உனது எனதல்ல நல்ல
கடுமுழைப்பின்றி வருவாய் அற்றவர் நிலையிது.
காமம் வாழ்வோடியைந்த அவசியம்! புனிதம்!
காமாந்தகர்களிதை வியாபாரமாக்கிப் பெண்ணைக் காதலடிமையாக்கினார்.
காதலோ காதலில்லையோ கூடி முயங்கிக்
காசு பெறும் தேவைக்காரர் இவர்கள்.
நந்தவனம், அருவிக்கரை, தோட்டம், விளையாட்டிடம்
சந்திக்கும் இடமான களவொழுக்க அமைப்பு
சிவப்பு விளக்கென்ற துய்ப்பு (நுகர்வு) மையமானத

சிவக்கும் முகமாயிங்கு தேவதைகள் காத்திருக்கிறார்கள்.
பெண் ஆண் சேர்க்கை பின்னியதில்லறம்.
பாலியல் இயற்கை உறவு கற்பொழுக்கம்.
பெருமையாம் குறிஞ்சி நிலத்துப் பண்பு.
குடும்பமாம் சமூக நிறுவனப் பிரபந்தமிது.

பெண்ணையும் நிலத்தையும் ஆளுமை கொள்ளும்
பகிரங்க உறவாக இலைமறை காதலிங்கு.
பாலியல் இயற்கை இங்கு பரத்தமையாகிறது.
பணமெனும் சீவ அப்பமவளுக்கு, தேவதாகமவனுக்கு.

தேவனொருவன் மனம் மாறி இவர்களுக்கு
தேன் வதை இல்லறம் தருவானா!
தேம்பும் நிலையா! தேறுதலா! மனத்
தேவை நிறையுமா! தேவதைகள் காத்திருக்கிறார்கள்!

ஆக்கம் வேதா. இலங்காதிலகம். டென்மார்க்