நம்பிக்கை!

உண்மையை
உரைத்திட
விழியை
உயர்த்திட
பழிகளுக்கு
பயம் பயம் பயம்..
விளக்கமில்லா
வினாக்களுக்கும்
விடையிருந்தும்
விட்டெறிய
விளக்கமில்லா
பயம் பயம் பயம்.
ஓரப்
பார்வைக்குள்
ஓராயிம்
ஏக்கங்கங்கள்
பாரபட்சம்
காட்டும் காட்டுச்
சமூகத்துக்கு
பயம் பயம் பயம்..
உதட்டோரத்தில்
ஒழிந்திருக்கும்
அந்த ஒற்றைப்
புன்னகையை
புடம் போட புரியாத
புதிரென்ன?
பயம் பயம் பயம்.
வலிகளின்
மொத்த வார்ப்பாக்கி
வாய்பேதுமில்லாமல்
வாயடைத்தவர்
வாழ்வை குடை
அது சாக்கடை
துடை துயரைத் துடைக்க
பயம் பயம் பயம்..
ஒற்றைத்
துப்பாக்கியை
முப்படையாக்கிய
வல்லவன்
உடைத்த தடையால்
உலகை
வியர்க்க வைத்தவர்களை
படி! துடி! பிடி!
அவ் வழிகளின்
சுவடுகளில் நட
பயம் கலையும்…
நீயே
தீயாகு உன்
எழில் விரும்பிகளின்
இச்சைக்கு
பிச்சை போடுவதை
நிறுத்தி நீ நிமிர்.
தடை உடை தகர்.
அதனை போட்டவர்
மனம் சாக்கடை
அதை துடை உன்
துயருக்கு விடையது..
உன் பிறப்பு
வெறும் போகப்
பொருளல்ல
உன் எழில்
விளம்பரத்துக்கும்
வியாபாரத்துக்குமல்ல
பயம் பயம் அதை கலை.
விழி உன்
மொழியின்
பலம் கொண்டு
உளியாகு ! செதுக்கு
உலகோடு உன்னையும்…
மூச்சு விடுபவன்
மட்டுமல்ல
முயற்சி உள்ளவனும்
உயிர் வாழ்வான்
நம்பு உன்கையில்
நம்பிக்கை..

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி