நயினார் தீவு அபிவிருத்திக் கழகம் நயினைச் சுடர் 8

05.11.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற நயினார் தீவு அபிவிருத்திக் கழகம் பிரான்சின் முத்தமிழின் சங்கமம் நயினைச் சுடர் 8 எனும் மாபெரும் கலை மாலை நிகழ்வில் அன்றைய தினம் முற்பகல் 11.30 மணியளவில் வித்துவான் திரு. தனேஸ் குழுவினரின் மங்கள இசை வாத்தியங்களுடன் இனிதே ஆரம்பமானது. விழாவின் பிரதம விருந்தினராக திரு. திருமதி செல்லத்துரை கமலேஸ்வரன் தம்பதியினரும்; சிறப்பு விருந்தினராக யாழ் நயினாதீவிலிருந்து வருகை தந்த மதிப்பிற்குரிய திரு. திருமதி நாகமுத்து யோகநாதன் தம்பதியினரும் ( நயினாதீவு நாகபூசணி அம்பாள் அறங்காவலர் சபை செயலாளர் மற்றும் நயினார் தீவு அபிவிருத்திக் கழக பிரான்ஸின் இணைப்பாளர் ); கனடாவிலிருந்து வருகை தந்திருந்த மதிப்பிற்குரிய திருவாளர் நாகேசு சிவராஜ சிங்கம் ( குடிவரவு சட்ட ஆலோசகர். கனடா ) அவர்களும்; ஜெர்மனியிலிருந்து வருகை தந்த திரு. இ. இராஜசூரியர் ( உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் ஜெர்மன் கிளை தலைவர்) அவர்களும்; சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த திரு. இ. மருதலிங்கம் ( நயினார் தீவு அபிவிருத்திக் கழக நிர்வாக சபை உறுப்பினர். சுவிஸர்லாந்து ) அவர்களும் மற்றும் பலர் இணைந்து சிறப்பித்து மக்கள் பாராட்டும் வகையில் மிக சிறப்பாக நடந்து முடிந்த து